நடப்பு
நாகராஜன் நல்லபெருமாள்

மதிய உணவுக்கு எண்பது ரூபாய் சற்று அதிகம்தான். மீதிச்சில்லறையில் ஒரு பத்தும் இரண்டுஐந்துமாக கொடுத்ததில் சர்வரின் நுட்பம் தெரிந்தது. மூன்றில் ஒன்றை டிப்சாக வைத்துவிட்டு எழுந்தேன். வாசலில் பசித்த குழந்தையுடன் பாவப்பட்டப் பெண்மணி நீட்டிய கைகளுடன் தர்மம் கேட்டு. தராதரம் பார்க்கும் நெஞ்சில் சமரசத்துக்குப் பஞ்சமில்லை. “சீ போ சில்லறையில்லை” எனும்போது ஈர்க்குச்சியில் நெம்பிய
பல்லிடை எச்சில் தொண்டைக்குள் தெறித்து
உள்ளிறங்கியது