This entry is in the series 20041028_Issue

ஜெயந்தி


நினைவுகளை கிளறிவிடும் நிலாக்களமிது
நிற்காத ரயில் ஒரு நினைவுக்கூடம்
செப்பு வைத்து விளையாடிய சிரிப்புகளும்
சைக்கிள் ஓட்டிய இரட்டைஜடை நினைவுகளுமாய்
சந்தோஷங்கள் சிறைப்படும் உதட்டுப் புன்னகையில்..

நேரம் செல்ல செல்ல நெருஞ்சிகளும் தலைதூக்கும்
புத்தகம் ஏதோ கையிலிருக்க
புத்தி மட்டும் பூட்டிய நினைவறைகளில்..
தூசி தட்டினாலும் தவறாமல் வலிக்கும் தோல்விகள்
திரும்ப கிடைத்தால் மாற்ற வேண்டிய அத்தியாயங்கள்
ஏன் விட்டுப் போனது என்று தெரியாக் காதலுமாய்
துக்கங்கள் உறைந்து போகும் உதட்டுப் பிளவில்..

ரயில் நின்று வீடு சேர்ந்தாலும் ரணங்கள் நிற்கும்
நிற்காமல் ஓடும் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கும்
தனியாய் ரயில் பயணங்கள் எப்போதும் தேவை
நான் யாரென்று திரும்பிப் பார்க்க….

-ஜெயந்தி
jeyanthi.sethu@bt.com

Series Navigation