சொல்லி முடியாதது
நிஷாந்தன்
என்ன சொல்ல வருகிறாய் என்கிற
என் ஊகத்தின் கதவில்
பட்டுத் தெறித்தன
சொல்லி முடியாத உன் சொற்கள்
நீ அறையை விட்டு நீங்கிய பின்
உன்னுடன் செல்ல
எத்தனிக்கவேயில்லை
உனது சொற்கள்
சிதறிய சோற்றுப் பருக்கைகளைப்
போன்ற அவற்றை
கவனமாக சேகா¢க்க முயன்றேன்
எழுத்துக்களாகக் கிடந்த அவை
வார்த்தைகளாக உருப் பெற்று
புகுந்து கொண்டன
ஏதோ ஓர் அகராதிக்குள்
என் புத்தக அலமா¡¢யின்
கனம் கூடியபின்னும்
தரையெங்கும் மினுங்கியது
சொல்லி முடியாத உனது சொற்கள்
poet.nishanthan@gmail.com