சூழிருளும் சுடரொளியும்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

நேற்று வரை
நீ யாரோ
நான் யாரோ?
இன்று
நீ எனக்கு யாரோ?
நாளைஆகக் கூடும்
நான் உனக்கு யாரோ?
நல்லவனுக்கு நல்லவனாய் இருத்தலே
நடைமுறை வாழ்க்கையில் கடினம்.
எல்லோர்க்கும் நல்லவனாய் இருக்க
எத்தனையோ சாகசங்கள் சமரசங்கள்.
சூரிய சந்திரர்க்கு என்னவோ
சூழிருளும் சுடரொளியும் ஒன்றுதான்.