சடங்குகள்
Published September 23, 2004 • By
ஈழநாதன்
ஈழநாதன்

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
கல்யாணம் கட்டி
புருஷன் வீடு போன அக்கா
அழுத கண்ணும்
சிந்திய மூக்குமாய்
திரும்பி வந்தாள்.
கல்யாணத்தன்று
வீட்டிலிருந்த
ஆட்டுக்கல்லை
அத்தானை மிதிக்கச் சொல்லி
அருந்ததியுடன் கூடிய
வசிட்டரையும்
அவருக்குக்
காட்டியிருக்கலாம்
ஈழநாதன்
—-
eelanathan@hotmail.com