This entry is in the series 20011111_Issue


தேவையான பொருட்கள்

1/2 கோப்பை பார்லி

3 கோப்பை தண்ணீர்

1 மேஜைக்கரண்டி எண்ணெய்

1 நடுவாந்தர வெங்காயம், அரிந்தது

1 பல் பூண்டு நசுக்கியது

2 நடுவாந்தர கேரட்டுகள், அரிந்தது

1 நடுவாந்தர உருளைக்கிழங்கு, அரிந்தது

1 செலரி குச்சி (இருந்தால்)

425 கிராம் தக்காளிகள் பொடிப்பொடியாக அரிந்தது

ஒரு பெரிய வெஜிடபிள் ஸ்டாக் சதுரம்

கொத்துமல்லித்தழை

பார்லியை இரவு முழுவதும் ஊறவைக்கவும்

எண்ணெயை ஒரு பெரிய பாத்திரத்தில் சூடேற்றி, வெங்காயம், பூண்டு போட்டு வெங்காயம் கண்ணாடி போல ஆகும்வரை வதக்கவும். (2 நிமிடங்கள்)

கேரட்டுகள், உருளைக்கிழங்கு, செலரி, தக்காளி, ஸ்டாக் சதுரம், பார்லி தண்ணீர் கலவை எல்லாவற்றையும் கொதிக்க விடவும். கொதி வந்ததும். மூடி, மெதுவான தீயில் சூட்டில் வைக்கவும். காய்கறிகள் மெதுவாகி நன்றாக வேகும் வரை வைக்கவும். பரிமாறுவதற்கு முன்னர் கொத்துமல்லி இலைகளைப் போட்டு பரிமாறவும்.

Series Navigation