கறை
Published July 7, 2002 • By
அனந்த்
அனந்த்

வானத்திலே பறந்துவந்த சிட்டு – அதன்
மகிழ்ச்சியிலென் மனம்பறக்க விட்டு
மேல்நிமிர்ந்து பார்த்துப்பிறர்
மேலிடித்து நடக்கையிலே
வாயினிலே விழுந்ததொரு சொட்டு!
? ? ? ? ? ?
வாசலிலே வந்ததொரு மாடு – அது
வாலெடுத்து ஆட்டக்குஷி யோடு
நானதனை ரசித்தபடி
நடந்துசெல்ல நல்லவெள்ளைச்
சட்டையிலே கெட்டசாணிக் கோடு!
v v v v v v
தொட்டிலிலே தூங்குமெந்தன் குட்டி – அது
தொடாமலே இனிக்கும்வெல்லக் கட்டி
கட்டவிழ்ந்த ஆசையோடு
கிட்டநின்று காணவாயில்
விட்டதய்யா நீரையந்தச் சுட்டி!
; ; ; ; ; ;