This entry is in the series 20010204_Issue

கோகுல கிருஷ்ணன்.


நான்கு வயதில்
அம்மாவின் கைப்பிடித்து
நான்கு தெரு தாண்டி
முருகன் கோவில் செல்லும்;
ாசாமி கண்ணைக் குத்தும்ா
அம்மாவின்
வார்த்தை நம்பி
கை கூப்பி கோவில் சுற்றும்.

பத்து வயதில்
பாிட்சை நாள் மட்டும்
பக்தி வந்து
பட்டையாய் நீறு பூசும்.

பதினாறு வயதில்
கற்சிலையை கைகள் கூப்ப
கறுப்புத் தாவணியை
கண்கள் கொத்தும்.

இருபது வயதில்
இறைவன்
இல்லையென்று
நாத்திகம் பேசி
பகுத்தறிவு தேடும்.

திருமணப் புதிதில்
திரையின் மறைவில்
நாத்திகம் மீண்டும்
ஆத்திகம் ஆகும்.

நாற்பது வயதில்
கவலைக் கணைகள்
கனமாய் தாக்க
புலம்பலைக் கேட்க
மனிதர் இல்லாததால்
கடவுளைத் தேடும்.

நான்கு தெரு தாண்டி
முருகன் கோவிலுக்கு
மகனை
ாசாமி கண்ணைக் குத்தும்ா
மிரட்டிச் சொல்லி
விரட்டிச் செல்லும்.

Series Navigation