This entry is in the series 20001225_Issue

பாரதிராமன்


சந்தேகமில்லை

நீ கடவுள்

நீ இல்லாத இடமே இல்லை

எங்குமாய் நிறைந்திருக்கிறாய்

மேலேயும் இருக்கிறாய்

கீழேயும் இருக்கிறாய்

ஆண் பெண் பேதமில்லை

சாதி சமயங்களுமில்லை

இன மொழி வேற்றுமைகள் இல்லை

இல்லை என்பதும் இல்லை

மிகப்பொியவன் நீ

சிறிய அவதாரமும் கூட

உன் சாம்ராஜ்ஜியத்துக்கு எல்லைகள் இல்லை

சாதனைகளுக்கும் கூட

மூலவராய் இருட்டில் உறைகிறாய்

உற்சவராய் வெளிச்சம் போடுகிறாய்

மேம்பாலத் தூணிலும் இருக்கிறாய்

மின் வாாியத் துரும்பிலும் இருக்கிறாய்

சந்தேகமேயில்லை

நீ கடவுள்தான்.

ஒரே ஒரு குறை

பயமிகு ரகசியத்திலேயே

உனைத் தொழவேண்டியுளதே

ஓ லஞ்சமே!

Series Navigation