“ நிற்பவர்கள்”

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

கே.பாலமுருகன்


கே.பாலமுருகன்

நிற்பவர்கள்
நிதானித்துக் கொண்டிருக்கிறார்கள்!

காலம் காலமாக
நிற்பவர்கள்
ஓய்ந்ததாகத் தெரியவில்லை!

பேருந்து நிலையம்
பேரங்காடியோரம்
கடைவரிசையின் தூண்களில்
சாலை முச்சந்தியின் விளிம்பில். . .

நிற்பவர்கள்
எதையோ நுணுக்கமாகப்
பார்க்க முற்படுகின்றனர்!

நிற்பவர்களின்
கால்கள்
பெரிய தூண்களாக
மாறுகிறது!

நிற்பவர்கள்
நடந்து கொண்டிருப்பவர்களை
அதிசியத்து வெறிக்கிறார்கள்!

நிற்பவர்கள்
எல்லோரையும்
எல்லாவற்றையும்
கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
0 0 0 0 0 0 0

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்