பொது ஒழுக்கம்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

உஷாதீபன்


எனது இருசக்கர வாகனத்தில் நான் சென்று கொண்டிருக்கும் பொழுதெல்லாம்; கவனிக்கிறேன். முன்னே செல்லும் வாகனங்களில் சைக்கிளில் செல்வோர், ட்ரை சைக்கிளில் செல்வோர், நடந்து செல்வோர்,இவர்கள் ஒதுங்கி வழி விடுவதில்லை. சமீபகாலமாக இந்த நடைமுறை வந்திருக்கிறது எனலாம். இதை எத்தனைபேர் கவனித்தார்களோ தெரியாது. கவனித்து விட்டிருக்கலாம். அந்தந்த வாகனத்தின் தன்மைக்கேற்றவாறு சாலையில் அவையவைகள்இடதுபுற ஓரங்களில் செல்ல சாலை விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அல்லது பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனதன் விதிகளின்படி அவையவை சென்று கொண்டிருந்தால், எந்த விபத்துமோ. இழப்போ ஏற்படப்போவதில்லை. அவற்றிலிருந்து அவை முரண்படுகையில்தான் தேவையில்லாதவைகளெல்லாம் நிகழ்ந்து போகின்றன.
“பெட்ரோல் போட்டுக்கிட்டு ஃபாஸ்ட் மூவிங் வெஉறிக்கிள்ஸ்ல போகிறவருக்கு காலால மிதிச்சிட்டு ஓட்டுறவனோட கஷ்டம் தெரியுமா? “- என்று ஒருவர் சொல்லிக்கொண்டே போனார். இதுதான் மனித வக்கிரம். .அவருடைய கஷ்டத்தை நான் கேவலமாகவோ, ஏளனமாகவோ நினைக்கவில்லை. யாருமே அப்படி நினைக்கப்போவதில்லைதான். ஆனாலும் அப்படி நினைப்பதாக அவராகவே நினைத்துக்கொண்டு, ஒதுங்காமல் செல்கிறார். இம்மாதிரியான அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். எத்தனைமுறை ஒலி எழுப்பினாலும் ஒதுங்காமல் சென்றால் அதை என்னவென்று சொல்வது? மனித வக்கிரம்தானே? இதிலிருந்து என்ன தெரிகிறது? வுpதிகளெல்லாம் சரியாகத்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துகையில் மனித வக்கிர குணங்கள் உள்ளே புகுந்து நேரான Pசீரான நடைமுறையைச் சீரழிpத்து விடுகின்றன. அப்படித்தானே? இது ஒருவீட்டிற்கும் சரி, நாட்டிற்கும் சரி, பொருந்தும்தானே? வீட்டிற்கு என்ன விதி? ;தலைவிதி என்று ஒன்றுதானே உண்டு! வேறு ஏதேனும் “ரூல்ஸ்” வகுக்கப்பட்டிருக்கிறதா? என்று கேலியாக நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. வீட்டிற்கான விதி என்பது நடப்பியலை நிர்ணயிப்பது. தலைவன்,தலைவி எப்படி நடந்துகொள்ளவேண்டும் – குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக வழிகாட்டியாக , எப்படி விளங்க வேண்டும் – அவர்களை எப்படி வழி நடத்த வேண்டும்- வீட்டின் அன்றாட நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படவேண்டும் என்பவை எல்லாமுமே அடங்கியதுதான் குடும்ப விதி என்பதாகும். வீடாகட்டும்,அலுவலகமாகட்டும், வீதியாகட்டும்- எந்த இடமானாலும் அங்கே “பொது ஒழுக்கம” என்ற –எல்லோராலும் -படிப்பினையாலும் – அனுபவத்தாலும் உணரப்பட்ட விதி – பின்பற்றப்பட்டால்தானே எல்லோருக்கும் நல்லது? தன் குடும்பத்தின் மீது பற்றுள்ளவன் – தனது கடமையின் மீது பற்றுள்ளவன் – ;தன் அலுவலகப்பணியின் மீது கவனமுள்ளவன் – இந்த தேசத்தின் மீது பற்றுள்ளவன் – இம்மாதிரியான பொது ஒழுக்கவிதிகளிலிருந்து முரண்பட வாய்ப்பேயில்லை என்பது என் கருத்து.
பொருளாதாரப் பிரச்னைகளாலும் வாழ்க்கைச் சிக்கல்களாலும் மனிதர்கள் சமூக ஒழுக்கங்களிலிருந்து முரண்படுவது இயல்புதான் எனினும் அடிப்படையில் மனிதனி;ன் நெஞ்சில் ஆழப்பதிந்துபோன பொது ஒழுக்கம் சார்ந்த நன்னெறிகள்- அவரவர் அளவில் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் எ;னபது இன்றியமையாததாகும்.
எதிர்நோக்கும் எல்லாவற்றையுமே கேலியாகவும், ஏளனமாகவும் அலட்சியமாகவும் புறந்தள்ளப் பழகிக்கொண்டோமானால், அது வாழ்க்கையின் அடிப்படை ஒழுக்கவிதிகளையே சிதைத்துவிடும்ஃ ஒவ்வொரு தனி மனிதனும் இவ்வாறு முரண்படும்பொழுது சமூக ஒழுக்கம் எ;னபது சர்வசாதாரணமாய்ச் சிதைந்து சீரழிந்து விடும்.

இப்படியிருந்தால் என்ன? அப்பபடியிருந்தால் என்ன? இதனாலென்ன? அதனாலென்ன? பொழுது விடியாதா? உலகம் இருண்டா போகும்? குடி முழுகியா விடும்? என்று சின்னச் சின்ன விஷயத்திலெல்லாம் மனிதர்கள் முரண்படுகிறார்களோ? என்ற கவலையால் எழுந்தது இந்தச் சிந்தனை! இது மனித நேயச் சிந்தனை! வேறல்ல!! ————————————-

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்