“மாறிப் போன தடங்கள்”

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

உஷாதீபன்


போய்விட்டு வந்த அன்று மனது மிகவும் கனத்துப் போனது. ஏன்; போனோம்? என்று ஆகிப்போனது. எதையெல்லாம் நினைத்துக்கொண்டு போய்வருவதைத் தவிர்த்திருந்தேனே-அவையெல்லாமும் அழிந்துதான் போயிருந்தன. பயந்தது போலவே! மனசில் நின்றிருந்த பிம்பங்கள் ; வேறு. அது சின்ன வயதில் நான் ஓடியாடித் ;திரிந்த தெருக்கள். பார்த்துப் பார்த்து மகிழ்ந்த வீடுகள். நீந்தி நீந்திக் களைத்த ஆறு. மனதில் பதிந்து போயிருந்த படித்த பள்ளி. அதன் பின்னே தனித்து நின்ற மலை. ;அதன் கீழே பரந்து பட்ட பொட்டல் வெளி. இப்படி எல்லாவற்றிலுமா ஒரு மாற்றம் வரும்? மனது நொந்து போனது எனக்கு.

அது வத்தலக்குண்டு ஊர். அப்போது அது மதுரை மாவட்டம். இப்போது திண்டுக்கல்லின் கீழே வருகிறது. வெற்றிலைக்குண்டு என்றுதான் அதற்குப் பெயர். குண்டு குண்டான வெற்றிலை விளையும் கொடிக் கால்கள் அப்போது அதிகம் அங்கே. அதனால் அந்தப் பெயர் என்பார்கள்.
எனக்குத் தெரிய தக்காளிக் கமிஷன் மண்டிகளைத்தான் நான் அங்கே அதிகம் பார்த்திருக்கிறேன். அவ்வளவு விளைச்சல் சுற்றுப் பகுதிகளில். கொடைக்கானல் மலைக்கு எங்கள் ஊரைத் தொடாமல் செல்ல முடியாது யாரும். வாருங்கள், வாருங்கள் என்று எல்லோரையும் கைநீட்டி வரவேற்கும் எங்கள் ஊர். பி.ஆர்.இராஜமய்யர்-கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பெரும் படைப்பாளி-பிறந்தது இந்த ஊர்தான் அக்ரஉறாரத்தில் மூன்று தெருக்கள் உண்டு. ஒற்றைத் தெரு, நடுத்தெரு, கோயில் தெரு என்று. அதில் கோயில் தெருவில்தான் பி.ஆர்.இராஜமய்யர்; அவர்களின் வீடு உள்ளது. எழுத்து ஆசிரியரும் மணிக்கொடிக்கால எழுத்தாளருமான ஜாம்பவான் திரு. சி.சு.செல்லப்பா அவர்கள்தான் நூற்றாண்டு விழாக் கொண்டாடினார்கள் திரு பி.ஆர்.இராஜமய்யருக்கு. பெருமுயற்சி எடுத்துச் செய்தவிழா அது. ;கோவில்தெருவில் இராஜமய்யரின் பிறந்த வீட்டை நினைவிடமாக்கினார்கள் அப்போது. அந்த விழாவுக்கு திரு ஜெயகாந்தன் உட்பட எல்லா எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். நான் திரு. நா.பார்த்தசாரதி, ;திரு பி.எஸ்.இராமையா போன்றவர்களைப் பார்த்தது அப்போதுதான். திரு.எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் சேவா ஸ்டேஜ் குழுவினரின் “தேரோட்டி மகன்” நாடகம் நடைபெற்றது விழாவின்போது. நாங்கள் படித்துக் கொண்டிருந்த கழக உயர்நிலைப்பள்ளியில்தான் இந்நாடகத்திற்கான ஒத்திகை நடைபெற்றது பகலில். மறைந்த நடிகர் திரு.முத்துராமன் அவர்களை ;;;கோயில்தெருவில், ஒரு வீட்டில் பக்கத்தில் அமர்ந்து ‘ஆ’வென்று பார்த்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அமைதியானவர். அமர்த்தலாய்ப் பேசக் கூடியவர்.ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அப்படி ஒரு நடிகரைப் பார்ப்பது அரிது. திரு. சி.சு.செ.யின் சிஷ்யகோடிகள் நாங்கள். அதாவது நானும் எனது நண்பர்களும். அவர் விழாவுக்காக, அதன் மேன்மைக்காகக் கடுமையாக உழைத்தார். அவர் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு செய்தோம்; நாங்கள். ஓடி ஓடிச் செய்தோம். ஆடிப்; பாடிச் செய்தோம். அவ்வளவு சந்தோஷம் அப்போது. மேல மந்தை இராஜாஜி மேடையில் விழாக் கூட்டம். நாதஸ்வரம், மேளம் முழங்க ஊர்வலம். திரு நா.பா. அவர்களோடு ஒட்டி ஒட்டி நடந்துகொண்டு வந்ததும் , அவரை, அவரின் கம்பீரத்தை,அந்த தீட்சண்யத்தை, அந்த நிமிர்ந்த நடையை, அதன் அழகைப்பார்த்து அனுபவித்துக்கொண்டே கூட வந்ததும் அத்தனை பெருமை மனதிற்குள். எங்கள் ;ஊர் திரு சி.சு.செ. அவர்களால் பெருமை பெற்றது. ;திரு பி.எஸ்.இராமையா,சிறுகதை மன்னன் அவர்களின்; ஊரும் அதேதான்.”பெரிய அகம்” என்று ஒருவீடு உள்ளது கோயில்தெருவில். அதுதான் திரு சி.சு.செ. அவர்களின் வீடு . வாசல்ட திண்ணையில் சுற்றிவர நாங்கள் ;அமர்ந்துகொண்டு அவர் பேசுவதைக் கேட்போம். எங்களின் கத்துக்குட்டிக் கவிதைகளை எடுத்து விடுவோம். எழுதி நீட்டுவோம.;. ஒன்றும் சொல்லாமல் எல்லாமும் அமைதியாய்த் திரும்பி வந்துவிடும். திரு சி.சு.செ. அவர்கள் மாதிரி ஒரு உழைப்பாளியைப் பார்க்கவே முடியாது. தான் எழுதி அச்சிட்ட புத்தகங்களைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்றவர்அவர். ‘எழுத்து’ இதழ்களைப் பின்னிடுவது தபாலில் அனுப்புவது-ஆகிய பணிகளில்; அவரே முன்னின்று எல்லாமும் செய்வார். அவரது துணைவியாரின் பங்கு இதில் அதிகம். எங்களின் சிறிய அளவிலான பங்கும் கொஞ்சம் உண்டுதான் ;..ஸ்ரீராமனுக்கு அமைந்த அணில் மாதிரி. சி.சு.செ. மிகவும் எளிமையானவர். கட்டிக் கட்டி நீர்க்காவி ஏறிப்போன ஒரு வேட்டியில்தான் எப்;போதும் தெரிவார் அவர். .காடாத்துணியில் தைக்கப்பட்டிருக்கும் மார்பையும், கழுத்தையும் முழுமையாக மறைத்த – கையில்லாத பனியன்; போட்டிருப்பார். ஒரு டயர்ச் செருப்பு.; அந்தச் சத்தம் கேட்டுக் கேட்டுப் பழகிப் போய், அவர்தான் போகிறார் என்று பார்க்காமலேயே,வீட்டுக்குள் இருந்தமேனிக்கே சொல்லிவிடுவோம் நாங்கள். தியாகி சுப்ரமணிய சிவா அவர்களுக்கும் அந்த ஊர்தான். எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கும் வத்தலக்குண்டு ஊர்தான் சொந்த ஊர். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் இருந்தால் அது பெரும் தவறு. காசுக்காக எழுதாமல் கருத்துக்காக எழுதுபவர் அவர். எழுத்துக்கு நல்ல நோக்கம் வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர். அவருடைய எந்தப் படைப்பும்,வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டது அல்ல. அத்தனை அற்புதமான,லட்சிய நோக்கிலான படைப்பாளி. இத்தனை பெருமைகளையும் உள்ளடக்கிய அதே ஊரில்தான் பெரிய தியாகி ஒருவரும் இருந்தார். அவர்தான் எங்கள் தந்தை. தனக்கு வாய்த்த Nஉறாட்டல் உத்தியோகம் தன் பிள்ளைகளுக்கும் ;தொடர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக நின்றவர். மிகக் குறைந்த வருமானத்தில் எங்களைப் படிக்க வைத்தவர்;. நாங்கள்மூவரும் அரசாங்க வேலைக்குப் போயாக வேண்டும் என்பதில் திடமாக,தீவிரமாக இயங்கியவர். Nஉறாட்டலில் வேலை பார்த்து உயர்ந்த கு:டும்பம் ஒன்று உண்டென்றால் அது எங்கள் வீடு ஒன்றுதான். அப்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. பொடி போடுவதைத் தவிர. அதைக்கூட, அதற்கான மிகக் குறைந்த செலவைக்கூட, எங்கள் படிப்பிற்காகக் குறைத்துக் கொண்டவர் அவர். திடமாக, ஐம்பது ஆண்டுகாலம், எந்தச் சலனமுமில்லாமல் ஒரு மனிதனால் இப்படி உழைக்கமுடியுமா? முடிந்தது அப்பாவால். அந்த மன உறுதி யாருக்கும் வராது. அப்பாவின் தியாகங்கள் அளப்பரியது. அதற்கு உறுதுணையாய் நின்றது அம்மா. அவளின் தியாகங்களையும் மறக்க இயலுமா? மறந்தால் நாங்கள் மனிதர்கள் அல்ல.

அப்பா வேலை பார்த்த ‘வெங்கடேஷ் கபே’ இப்பொழுது இல்லை. நாங்கள் குடியிருந்த ஏழரை ரூபாய் வாடகை வீடு இப்போது இல்லை. எனக்கு இலவசாமாய் டியூஷன் ;சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் கிருஷ்ணசாமி இன்று இல்லை. அண்ணாவுக்கு எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுக்குப் பணம் பதினைந்து ரூபாய் கொடுத்து உதவிய மிராசுதார் இப்போது இல்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்தான்’.
ஏன் அக்ரஉறாரத்தில் பழைய நபர்கள், படித்த நண்பர்கள் என்று எவருமே இல்லை இன்று. ;அநேகவீடுகள் இடிக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்பட்டு-யார் யாரோ-எவரெவரோ- குடி வந்து விட்டார்கள். படித்த பள்ளிக் கட்டிடம் பல இடங்களில் சிதைந்திருந்தது. அதன் சுற்றுச் சூழல் பெரும் மாசு படிந்திருந்தது.கணக்கிலடங்கா வீடுகள். பின்புறம் சும்மாக் கிடந்த பொட்டல் வெளிகள்; அனைத்திலும் வீடுகள் முளைத்திருந்தன. பள்ளியைச் சுற்றியிருந்த விளையாட்டு மைதானம் இப்போது மிகவும் சிறுத்துப் போயிருந்தது.
என் மனமும் சிறுத்துப் போனது. நான் நீந்தி நீந்திக் களித்த ஆளு எங்கே? குதிரைக் கல்லிலிருந்து யானைக் கல்லுக்கு முக்குளித்து நீந்தி வந்து கரையோரமாய்க் குளித்துக் கொண்டிருந்த முத்துராணியின் காலைக் கிள்ளினோமே? அந்த இடம் எங்கே போனது?
அரச மரத்தடிப் பிள்ளையாருக்கு முன்னால் பசுவன் உட்கார்ந்திருக்க, சுற்றிவர ஆடி; பதினெட்டுக்கு அவனுக்க சித்ரான்னங்கள்; படைக்கும்; கோலாட்ட நிகழ:;ச்சி நடைபெறுமே? அந்தக் கோயில் என்னாயிற்று? கண்களில் கனல் பறக்க முறுக்கிய மீசையுடன் கையில் வாளோடு ;காவலுக்கு நிற்கும் சங்கிலிக் கருப்பன்! அவனின் காவல் என்னவாயிற்று?
ஆறு இருந்தால்தானே இவையெல்லாம் வேண்டும்? ஆறே இல்லை. அதுவே குறுகிக் குறுகி ஒரு கோடுபோல் ஓரமாய் ;சாக்கடை நீராய்; துர்நாற்றத்தோடு தேங்கிக் கிடக்கிறதே? கொசுக்களின் பிறப்பிடமாய்-அசுத்தத்தின் இருப்பிடமாய்! என்ன கொடுமை இது?
மனசு மிகவும் கனத்துப் போனது. சொந்த ஊர் போனால் மன நிம்மதி ஏற்படும். சந்தோஷம் மிளிரும்.இது நேர்மாறாய் ஆகிப் போனதே?
மனதில் ஏற்கனவே படிந்து போயிருந்த பிம்பங்கள் அழிந்து போய் விடுமோ?
அவற்றினால் உள்ளத்தில் தேங்கிக் கிடந்த நன்னெறிகள் சிதிலமாகுமோ? ஆகாது. அதுதான் ஆதார ஸ்ருதி. அவைதான் உரம். அந்த உரத்தில் வளர்ந்ததுதான் என்னுள் படிந்திருக்கும் நன்னெறிகள். அவைகளுக்கு என்றுமே அழிவில்லை. இது சத்தியம்!!!


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்