“அநங்கம்” இதழ்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

பாண்டித்துரை


2007ல் மலேசிய இதழான “காதல்“” சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று “காதல்” இதழ் வெளிவரவில்லை எனினும் காதல் இதழ் மலேசிய மகாணங்களில் சில விதைகளை தூவியிருக்கிறது. அதில் விட்ட முளையாகத்தான் “அநங்கம்” இதழினை பார்க்கத்தோன்றுகிறது. மலேசியாவின் கெடா மகாணம், குறிப்பாக சுங்கைப்பட்டாணிக்கு மலேசிய இலக்கியத்தில் தனிச்சிறப்பு இருக்கிறது. அங்கிருந்துதான் “அநங்கம்” அரும்பியுள்ளது.

சமீபகாலமாக தமிழக சிற்றிதழ்களில் தொடர்சியாக தனது படைப்புகளை அளித்து வரும் மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன், மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அநங்கம் இதழினை வெளியிட்டுள்ளனர். தீவிர எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், வாசகர்களையும் இணைப்பது என்ற எண்ணத்தில் இதுவரை இரு இதழ்கள் வெளிவந்துள்ளன.

இதன் தொடர்ச்சியான மூன்றாவது இதழ் சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் வரும் சனிக்கிழமை 14.03.2009 அன்று, மாலை 4.30 மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்தில் தக்காளி அறையில் (இரண்டாவது தளம்) நடைபெறுகிறது.

நிகழ்வில் இதழ் ஆசிரியர் கே.பாலமுருகன் மலேசிய மூத்த எழுத்தாளர்கள் சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு அறிமுகம் மற்றும் கலந்துரையாடலாக நிகழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. முழுநாள் பயணத்தை இரண்டு மணிநேரத்தில் கடக்கவிருக்கும் மலேசிய எழுத்தாள நண்பர்களுக்காகவும், வாசகர்களையும் எழுத்தாளர்களையும் அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச் செல்லும் வாசகர் வட்ட நண்பர்களின் முயற்சிக்காகவும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க…

அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை


hsnlife@yahoo.com

Series Navigation