ஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

மலர்மன்னன்1. பெரும்பாலும் நான் சொல்லச் சொல்லப் பிறர்தான் கணினியில் அடித்து உதவுகிறார்கள். சிலசமயம் அதைச் சரிபார்க்க முடியாமல் போய்விடுகிறது. கந்தமால் என்பது காண்டஹார் என மாறிவிடக் காரணம் ஒரே சமயத்தில் ஆப்கானிஸ்தான் பற்றியும் வேறொரு கட்டுரையைச் சொல்லிக் கொண்டிருந்ததுதான். தமிழில் என்னால் விரைவாக அடிக்க முடிவதில்லை. வயதானது என் நாடி நரம்புகளில் த்ன்னை நினைவூட்டுவதாலும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. என்ன இருந்தாலும் பிழை பிழைதான். ஆனால் எழுத்துப் பிழையாகக் கொள்ள வேண்டுகிறேன்.
2. கிறிஸ்தவ தலித்துகளை வனவாசிகளுக்கு எதிராகக் கிளப்பிவிடுவதால் மிஷனரிகளுக்கு லாபம் என்று நான் குறிப்பிடவில்லை. கிறிஸ்தவ தலித்துகள் மிஷனரிகளின் பக்க பலத்துடன் தாமும் வனவாசிகளே எனச் சான்றிதழ் பெறுவதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிகழ்கிறது என்றே குறிப்பிட்டிருக்கிறேன். வனவாசிகளின் நிலப்பரப்பையும் கிறிஸ்தவ தலித்துகள் மிஷனரிகளின் செல்வாக்கில் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். ஒருவகையில் இது மிஷனரிகளுக்கு லாபமாகி வ்ருகிறதுதான்!
3. பிஹார், மத்தியப் பிரதேசம் முத்லானவை அடிப்படையில் வனவாசிகளின் மாநிலங்களேயாகும். அங்கெல்லாம் பிறர் புகுந்து வனவாசிகளை ஓரங்கட்டி விட்டனர். கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு இதில் பெரும் பங்குண்டு. எனினும் இங்கெல்லாம் இன்றளவும் கிறிஸ்தவ மத மாற்றத்ததிற் குள்ளாகாத வனவாசிகள் கணிசமாகவே உள்ளனர்.
4. வனவாசிகள் மாநிலமான ஒரிஸ்ஸாவிலும் கந்தமால் மாவட்டத்தில் காந்தோ எனப்படும் வனவாசிகளை மத மாற்றம் செய்வதில் மிஷனரிகள் கடும் முயற்சி எடுத்தே வருகின்றனர். ஸ்ரீ லட்சுமணானந்த அதற்கு இடைஞ்சலாக இருந்ததால்தான் அவர் கொலைசெய்யப்பட்டார்.
5. வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் துப்பாக்கி முனையில் வனவாசிகள் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யப் படுகிறார்கள். ஒரு நிர்ப்பந்தம் காரணமாகவே வட கிழக்கு மாநில வனவாசிகள் கிறிஸ்தவர்களாகி வருகிறார்கள். பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் நிராதரவான ஹிந்துக் கள் எப்படி நிர்பந்தம் காரணமாக முகமதியராகிறார்களோ அப்படித்தான் வட கிழக்கு மாநில வனவாசிகளும் கிறிஸ் தவர்களாகி வருகிறார்கள்.
6. நீங்கள் நினைப்பதுபோல் ஹிந்துஸ்தானத்தில் உள்ள வனவாசிகள் அனைவருமே கிறிஸ்தவ்ர்களாகி விட வில்லை. தமது பாரம்பரியமுறைப்படியே இயற்கையையும் முன்னோரையும் வழிபட்டு வரும் வனவாசிகள் பெரும் பாலானவர்களாகவே உள்ளனர்.
7. இயற்கை வழிபாடும் முன்னோர் வழிபாடும் ஹிந்து சமயத் திற்கு உட்பட்டவையே. நமது புராண, இதிகாசங்களிலும் வன்வாசிகள் பிரித்து வைக்கப்படவில்லை. எனவே அவர்களும் ஹிந்துக்களேயாவ்ர்.
8. வனவாசிகள் பூரண மத சுதந்திரத்துடன் தமது பாரம் பரியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், பொருளாதார நிர்பந்தம் காரணமாகக் கிறிஸ்தவ மிஷநரிகளின் வலையில் விழாமல் அவர்களைக் காக்கவும் ஹிந்துஸ்தானம் முழுவதும் வனவாசிகள் பகுதிகளில் வனவாசி கல்யாண் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. ஒருகாலத்தில் நான் அதனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தேன் .
9. சிதம்பரம் கோயிலில் தமிழ்ப் பார்ப்பனர்கள் எவரும் தமிழை எதிர்க்க வில்லை. தில்லையம்பலம் என்றென்றும் தமிழுக்கு உரிய இடம் அளித்தே வந்துள்ளது. முழு விவரமும் தெரிந்து கொண்டபின் எதிர்வினை செய்வதே முறையாகும்.
10. பெண்களுங்கூட அர்ச்சகராகும் நிலை ஏற்கனவே பல் இடங்களில் உள்ளது. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிப்ப தில்லை. ஆகம விதிப்படி நடைபெறும் கோயில்களில் ஆகமம் விதித்துள்ளவாறுதான் அர்ச்சகர்கள் இருக்க முடியும். எல்லா பிராமணர்களும்கூட அர்ச்சகர் ஆகும் உரிமை கோர முடியாது.
11. பிராமணர் மட்டுமல்ல, வைசியர், பொற்கொல்லர், கல்தச்சர் முதலானோரும் தம் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்விக் கின்றனர். வன்னியர்களும் இதனைக் கடைப்பிடித்து வந்தனர். நியாயப்படி பெண்கள் உள்ளிட்ட அனவருமே பூணூல் அணியலாம். பூணூல் அணிவதன் நோக்கம பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதல்ல. வாழ்வியலில் சுயக்கட்டுப்பாடுகளை மீறாதிருப்பதற்கான வேலி போன்றது அது. இன்று இது உணரப்படவில்லை என்பத ற்காக அதன் மீது குற்றம் காண் பது முறையல்ல. .

.

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்