வேத வனம் – விருட்சம் 34

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

எஸ்ஸார்சி


இந்திரன் வச்சிராயுதன்
பயங்கரன் உக்கிரன்
அனைத்தும் தெரிந்தோன்
ஊக்கம் அளிப்பதில்
சோம பானம் நிகர்த்தோன்
தேவ கந்தர்வ அப்சர்ச அசுர ராட்சச
வென்னும் ஐந்து வகை
சனங்களை க்காக்கும் அவன்
பாலகனாய் வருக எமக்கு.

நிலத்துப்பூர்விக
தச்யுக்களை சிம்யுக்களை
வச்சிராயுதத்தால் ஒழித்தோன்
கதிரோனை மீட்டு
நீர் நிலயை வசமாக்கி
விளை நிலங்களை
வெள்ளை நிறத்து
நட்புக் குழாத்தோடுப் பாகமிட்டவன்
பல்லோர் விளிப்பதுவுமந்த
இந்திரனை வச்சிராயுதவானை. ( ரிக் 1/100)

அசையும் சுவாசிக்கும்
உயிரிகளுக்கு த்தலைவன்
கிடைத்தப் பசுக்களை
பிராம்ணர்கட்கு வழங்கி
தச்யுக்களை தன் பாதம்
கீழாய்க்கொணர்ந்த
இந்திரனே நீ எம்மொடு
கொள்க நட்பு. 101

மானிடர்களைக்காப்பவனே
பலவானே
முக்கயிறு முறுக்கிக்கிடைத்த
வலிய தேர்வடமே
வான் வதியும் கதிர்
மேகம் புதை மின்னல்
புவி தங்கு அனலென
முத்தீயும் நினது

அற்பச்சண்டையோ
உக்கிரப்போர் எதுவோ
எதற்கும் அழைப்போம் நின்னை
வாரும் இந்திரனே
தாரும் ஊக்கம்
அறவழி யேகிப்
பெறுவோம் உணவு
வருணன் மித்திரன் அதிதி ஆழ்கடல்
புவியொடு வானும் தீயும்
உடன் எழுந்தருளி
புரிகத் துணை எமக்கு . ரிக் 102


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி