This entry is in the series 20030717_Issue

பவளமணி பிரகாசம்


தேடிய செல்வம் கூட வராது,
ஆனாலும் திரைகடலோடி திரவியம் தேடுகிறோம்,
தேடிய சொந்தம் காடு தாண்டாது,
ஆனாலும் பேர் சொல்ல பிள்ளை வேண்டுகிறோம்,
தேடிய நற்பெயர் சரித்திர ஏட்டில்,
ஆனாலும் நல்ல காரியத்தில் நாட்டமில்லை,
தேடிய தர்மம் தலைமுறை காக்கும்,
ஆனாலும் எச்சில் கையால் காகம் ஓட்டுவதில்லை-
விந்தை மனிதர் வாழும் வேடிக்கை உலகம்!

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation