வெற்றி

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


வலி ரணம்
அதன் தழும்புகள்
எப்படி இருக்கும். ?
தெரியவே தெரியாது எனக்கு.
பேனா பிடித்தபோது தான் தழும்புகள் தாராளமாய்.
மனசோ அடிக்கடி தடவிப்பாற்து பெரிமிதப்பட்டுக்கொள்ளும்.
எனது எழுத்துக்கள் உன்னை
அக்கு வேறு ஆணிவேறாய் பிய்த்தெறிந்து
கூறுபோட்டுள்ளதை உணர்கிறேன்-.
என் இதயத்தில் குத்தி குத்தியே
என்னை ரணப்படுத்தி
திருப்திப்பட்டுக்கொண்டதாய் நீ.
என்னை காயப்படுத்தி காயப்படுத்தி
என் குருதி அழைந்து மகிழ்ந்ததாய் உன் நினைப்பு.

நீயே உன்னை பிய்த்து
ரணப்படுத்தி இரத்தக்கறையை
உன்னை அறியாமலேயே
நீயே உன் முகமெங்கும் பூசியபடி
துடைத்துக்கொள்.
—-
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
thamarachselvan@hotmail.com

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.