விஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

மொஹம்மது ஷெஜாத் (ஃப்ரைடே டைம்ஸ் இதழிலிருந்து)


முஸ்லீம்களே உலகத்தை ஆள உரிமை உள்ளவர்கள், அதற்கு குறுக்கே வரும் காபிர்களைக் கொல்ல முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜமாத்-உத்-தாவா அமைப்பால் நடத்தப்படும் ஏராளமான பாகிஸ்தானிய பள்ளிக்கூடங்களில் இது பள்ளிச்சிறுவர்களுக்குச் சொல்லித்தரப்படுகிறது. இதனை லிபரல் போரம் ஆஃப் பாகிஸ்தான் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

லாஷ்கர்-ஈ-தொய்பா அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களில் (இது உத்-தாவா அமைப்பின் முந்தைய பெயர்) வன்முறையையும் வெறுப்பையும் பாராட்டி பெருமைப்படுத்திப் பேசும் பாடங்கள் இருக்கின்றன. உதாரணமாக, உருது ஆரம்பப்பாடத்தில், பை எழுத்து சொல்லித்தர உபயோகிக்கப்படும் வார்த்தை பந்தூக் (துப்பாக்கி). தல்வார் (கத்தி) டாங்க் ஆகியவை டை எழுத்தை சொல்லித்தர உபயோகிக்கப்படுகின்றன. ஜஹாஜ் (போர்விமானம்) ஜீம் எழுத்துக்கும், காஞ்சார்(குறுவாள்) கை எழுத்துக்கும், ராக்கெட் ரை எழுத்துக்கும் டயாரா (போர்விமானம்) டோய் எழுத்துக்கும் உபயோகிக்கப்படுகின்றன.

இரண்டாம் வகுப்பில் இருக்கும் உருது பாடப்புத்தகம், ‘காபிர்கள் இயற்கையிலேயே கோழைகள் ‘ என்று சொல்கிறது. ‘ஒரு புனிதப்போராளி அவர்களை தாக்கும்போது, அவர்கள் திகிலுடனும் பயத்துடனும் கதறுகிறார்கள் ‘ என்றும் கூறுகிறது. முஜாஹிதீன் (புனிதப்போராளிகள்) ஆண்மையின் திலகமாகவும், இவர்கள் கடவுளின் ஆணைப்படி நடக்கிறார்கள் என்றும் கூறுகிறது. இந்துக்களை கொல்பவர்கள் சூப்பர் ஹீரோக்கள். இவர்கள் கிடைக்கும் பொருட்களிலிருந்து பல ஆயுதங்களைச் செய்து காபிர் உலகம் பயத்தால் நடுங்கும்படிச் செய்கிறார்கள் என்று போதிக்கிறது.

கலைகளும் இசையும் தடைசெய்யப்பட்டவையாக போதிக்கிறது. கலைப்பொருட்களைச் செய்வதைவிட்டுவிட்டு, சிறுவர்கள் பிளாஸ்டிக் துப்பாக்கிகளை வாங்கி பலூன்களைச் சுட்டு பயிற்சி செய்ய கோருகிறது. விளையாட்டுத்திடலில் கொரில்லா முறைப்போரும், காபிர்களின் வண்டியை மறைந்திருந்து தாக்கி அழிப்பதையுமே விளையாட்டுகளாக இந்த பாடத்திட்டம் கொண்டிருக்கிறது. இளம் சிறார்கள் ஜிஹாத்தில் போர் புரிவதை கவிதைகள் கதைகளாகச் சொல்கின்றன. ‘தைரியமான சிறுவன் ‘ என்ற கவிதையில் பத்துவயதுள்ள குல் ரஹ்மான் நூற்றுக்கணக்கான ருஷ்யர்களை ஆஃப்கானிஸ்தானில் கொல்கிறான். இறந்த ஜிஹாதிகளால் எழுதப்பட்ட கற்பனைக்கடிதங்கள் பாடப்புத்தகங்கள் எங்கும் கிடக்கின்றன. ‘நான் போரில் இறந்தால் கொண்டாடுங்கள் ‘ என்று அப்துல் நா ?ிர் என்ற போராலி தன் தாயாருக்கும் சகோதரிக்கும் எழுதிய கடிதம் ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருக்கிறது. ‘அதே நேரத்தில் நீங்கள் உங்கள் உடலை மூடிக்கொண்டு, வாசனை திரவியங்களை உபயோகிக்காமல் இருங்கள் ‘ என்றும் அதே கடிதம் கூறுகிறது.

இந்தியா பாகிஸ்தானின் நிரந்தர எதிரியாக காட்டப்படுகிறது. சவூதி அரேபியா பாகிஸ்தானின் சிறந்த நண்பனாக காட்டப்படுகிறது. காஷ்மீர் பாகிஸ்தானின் பிரதேசமாகவும், அது இந்துக்களால் வலுக்கட்டாயமாகப்பிடுங்கப்பட்டதாகவும், முஸ்லீம்கள் மட்டுமே வாழும்படியான தேசமாக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதாகவும் இது கூறுகிறது. ‘எந்தக்கருணையுமின்றி முஸ்லீம் அல்லாதவர்களை அடித்து நொறுக்க வேண்டும் ‘ என்று குழந்தைகள் போதிக்கப்படுகிறார்கள். ‘ஒவ்வொரு மாணவனும் புனிதப் போராளியாக ஆகவேண்டும் ‘ என்று இரண்டாம் வகுப்பு புத்தகம் கூறுகிறது. ‘நாம் எல்லோரும் நமது உயிரை மாபெரும் அணுசக்தி நாடான பாகிஸ்தானுக்காக கொடுக்கத்தயாராக இருக்க வேண்டும் ‘ என்று கூறுகிறது.

இது உத்-தாவா பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை கடையில் விற்பதில்லை. ஃப்ரைடே டைம்ஸ் இதழ் உத்-தாவா அலுவலத்தில் பதவியில் இருக்கும் அபு நாஸீர் அவர்களிடம் உத்-தாவா ராவல்பிண்டி மையத்தில் பேசியது. இவர் இந்த புத்தகங்கள் மாணாக்கர்களை சரியான பாதையில் செலுத்துவதற்காக எழுதப்பட்டவை என்று கூறினார். ‘நாங்கள் உண்மையான இஸ்லாமிய ஆன்மீகத்தை எங்கள் மாணவர்களிடம் உருவாக்க குறிக்கோள் கொண்டிருக்கிறோம். ‘ என்று நாஸீர் கூறினார். ‘இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கைமுறை என்பதையும், வெறும் சடங்குகள் அல்ல என்பதையும் எங்கள் மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் தீவிரமாக விரும்புகிறோம். ஆகவே, பாடப்புத்தகங்கள் வழியே எங்கள் மாணவர்கள் இ ?லாமின் நோக்கத்தையும் அதன் கருத்துக்களையும், நமது பெருமை பெற்ற வரலாற்றையும் சொல்லித்தருகிறோம் ‘ என்று கூறினார்.

Feb 7 – 13, 2003 – Vol. XIV, No. 50 Friday Times

Series Navigation

மொஹம்மது ஷெஜாத் (ஃப்ரைடே டைம்ஸ் இதழிலிருந்து)

மொஹம்மது ஷெஜாத் (ஃப்ரைடே டைம்ஸ் இதழிலிருந்து)