விழி, மொழி, பழி
Published October 1, 2002 • By
அனந்த்
அனந்த்

அல்லிஉன்றன் விழியலவோ என்றேன்
அழகியவள் அகலப்பின்னால் சென்றேன்
…. அல்லியென்றால் பகலிலென்கண்
…. அலர்வதும்ஏன் புகலுமென்றாள்
சொல்லிழந்து தலைகுனிந்து நின்றேன்!
*****
பாகுமொழி என்றுரைப கர்ந்தேன்
பாவையவள் நோகப்பின்தொ டர்ந்தேன்
…. பாகதுதான் உருவெடுக்க
…. வேகுமத னாலுவமை
ஆகஇய லாதெனஉ ணர்ந்தேன்!
*****
பெண்மயிலே, வா!என அழைத்தால்
பெருஞ்சினமே கொண்டுதீ விழித்தாள்
…. மண்ணிதனில் மயில்களிலே
…. பெண்ணைவிட ஆணழகுன்
எண்ணமெலாம் தீதெனப் பழித்தாள்!
*****
ananth@mcmaster.ca