வினையில்லா வீணை

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

ஆ. மணவழகன்


அலாரம் வைத்தோ…
அடுத்தவர் தட்டியோ..
ஐந்து மணிக்கே எழவேண்டும்!

அழ்ந்த உறக்கமோ…
அழகான கனவோ…
தொலைபேசியைத் தொல்லை பேசியாக்கி
சுகம் சுகமாய் வாழ்த்தவேண்டும்!

மேகம் தூது என்றால் – அது
மேலைக்காற்றின் வசம் தானே!
மின் அஞ்சல் தூது என்றால்…
மின் மினியாய் ஒளித்திடுமே!

ஆறப்போட்ட கவிதையை ஒரு முறை
அரங்கேற்றம் செய்யலாமா ?
பார்ிபோற்றும் தமிழால்ி – புது
பாமாலை தொடுக்கலாமா ?

பக்கத்தில் வரவழைத்து
பரிசுகள் கொடுக்கலாமா ?
பார்வைக்கு விருந்தாக – பல
புதுமைகள் செய்யலாமா ?

நிலைமொழி ஈற்றிக்கும்
வருமொழி முதலுக்கும்
இலக்கணம் உண்டு! – இணைப்பில் பல
இலக்கியம் உண்டு!

படித்தும் நான் அறியாததை,
பழக்கத்தில் நீ அறிந்தாய்!
வாழ்த்தோடு கூட – அவள்
வார்ப்பையும் சொல்லலாமா ?

எதிர்ப்பார்த்தே வைப்பாயோ!
எதேச்சையாய் வைப்பாயோ! – உன்
ஒவ்வொரு அடிக்குள்ளும்,
ஒளிந்திருக்கும் கதை உண்டு!
ஒன்றிரண்டை உரைக்கலாமா ?

வியக்கவைக்கும் கற்பனைகள்
விண்மீனைக் கோர்த்தெடுக்கும் கனவலைகள்!
வினையில்லா வீணையிலும்,
விதவிதமாய் நாதங்கள்!

ஏதேதோ அவசரங்கள்
என்னையும் இறுக்கிப் பிடிக்க…
உனக்கான திருநாளில் – நான்
உரைக்காமல் போனேனே!
பூவுக்குள் மணமாக – என்னில்
புதைத்து வைத்து மறந்தேனே!

வாழ்த்திற்குப் பார்த்திருந்து…
வருமென்று காத்திருந்து…
‘நீயுமா மறந்தாய் ‘
நிதாமனாய் நீ கேட்க…
நித்தமும் நின்று போக – நான்
நிமிடத்தில் இறந்தேனே!

**
a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்