விட்டு விடுதலையாகி….

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

கீதா ஷங்கர்


ஆறு வயது மகனுக்கு

ஆழ்துளையில் அகப்பட்ட

அறியாச் சிறுவனும்…

அப்பாவால் குத்திக் கொல்லப்பட்ட

இரண்டுங்கெட்டான் சிறுமியும்..

மூக்குக் கண்ணாடி காமிராவில் பதியப்பட்ட

லஞ்சப் பேரக் காட்சிகளும்…

இராணுவ வீரனின் மனைவியைக்

கற்பழிக்கப்பட்ட கந்தரகோளமும்

நட்சத்திர ஹோட்டலின்

தீவிரவாதிகளின் அட்டகாசங்களும்..

ஓன்றாய்த் தான் தெரிகிறது.!

தொலைக் காட்சியில் சரணடைந்த

அம்மாவிடம் இருந்து,

ஒரு நாள் விடுதலை என்று.!


g
eethashanker67@hotmail.com

Series Navigation

கீதா ஷங்கர்

கீதா ஷங்கர்