விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை

This entry is part [part not set] of 12 in the series 20001112_Issueபோனவருஷம் சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசொன்று
கற்பனையில் வரைந்த
பொற்பாதச் சித்திரத்தை
கலைக்க முடியவில்லையே இன்னும்

***

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்