வாழ்வே வரமா

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

பவளமணி பிரகாசம்


அகராதியானவனே! அன்பான கணவனே!
என் கண் பேசும், இதழ் உதிர்க்கும்
வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே!
பொய் கலவா மெய்யை கண்டவனே!
மெய்யின் முழுமை தந்தவனே!
மெய்யில் பாதி ஆனவனே!
ஆதவன் ஒளியூட்டும் நிலவா ?
ஆகாயம் பார்த்த நிலமா ?
நெஞ்சில் நிறைந்த நினைவா ?
அது நீயா ? நானா ? தனியா ?
தனிமை தொலைத்த தவமா ?
வாழ்வே என்றும் வரமா ?
———————————————————
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

author

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

Similar Posts