வாய் மொழி வலி

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சாமிசுரேஸ், சுவிஸ்


இலையுதிர் காலத்தின் உதிர்ந்து
வெளிறிப்புதைந்த சருகுகளாய்
மெய்யிலா முகத்திடை வாழ்வு
புரியாத முடிவுகளாய்
வரைவிலக்கணம் புரிந்து
வளிவெளியில் நிரம்பும்.
நீண்ட காற்றற்றவயலில்
புதையுண்டுபோன காரண காரியங்களின் மேல்
கையூன்றி நடக்கும் மனசு
திரும்பி வர மொழியின்றி விஷ அழுத்தத்தினால்
தேகத்தினு}டே தீப்பெருக்கு.
மரணத்திற்கென்ன குறை
அது தன் வழியே
சந்திக்கும் கிளைகளைச் சாய்த்தபடி
எடுப்பார் கைப் பிள்ளையாக நடந்து போகிறது.
நான் எல்லாக் காயங்களாலும்
புன்னகை சுமந்த புழுவாய் சபிக்கப்பட்டவன்.
மறுபடி மறுபடி தேய்ந்து
மரண வாக்கு மூலம்வரை மறுபிறவியெடுத்து
திமிரடங்காது துடிக்கும்
என் கண்களினு}டே உற்றுப்பார்
பல புழுதி படிந்த வரலாறுகள் தெரியும்
முகத்தில் வழியும் நாற்றங்கள் தெரியும்.
மெல்லக் கரைந்து இருளில் மறைகிறது மலை
என்னையும் தனதாக்க
திரை சுற்றி இறுக்கும் இருளோடு
நானும் என்னுள் புதைந்து போகிறேன்.

14.01.2007


sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்,சுவிஸ்

சாமிசுரேஸ்,சுவிஸ்