This entry is in the series 20030215_Issue

ஜடாயு


வீட்டின்
உள்ளும்
வெளியும்
ஒன்றிணையும் தளத்தில்
ஒளிவட்டம் வரையும்
வாயில் விளக்குகள்

உன்
உள்ளத்தில்
உண்மை
உண்டென்றால்
அதன்
ஒளி சுடர் விடும்
வாயில் விளக்குகள்
உன்
வாயில் வார்த்தைகள்
நீ
வரையும் கவிதைகள்
வகுக்கும் கடமைகள்
வாழும் முறைமைகள்
வழங்கும் தகைமைகள்
(c) ஜடாயு (jataayu@hotmail.com)

Series Navigation