வானம் பாருங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

இரா. கணேஷ்


கட்டையை நீட்டி
அண்ணாந்து
வானம் பார்த்தேன்

வெயிலின் உஷ்ணம்
ஜவ்வு போல்
என் முதுகில் படறியது

மரங்களின் சேலைகளை
அசைத்துப் பார்க்கும்
காற்றின் குறும்பு
என் காதோரங்களில்…

மனிதர்கள்
மனதிலிருந்து
மெல்ல விலகினர்

எனக்கும்
வானத்துக்கும் இடையே
எவருமின்றி…
எதுவுமின்றி…
வானம் மட்டும்….

மன பாரங்கள்
ஏக்கங்கள்
கவலைகள்
ஏமாற்றங்கள்

அந்த நிலாவைப் போல்
ஓரமாய் ஒதுங்கிப் போயின

வி¡¢த்து வைத்த
பாயைப் போல்
வாயைப் பிளந்து
என்னைப் பார்த்தது
வானம்

லேசாய்ப் போனது
மனது
அப்பளமாய் நொறுங்கிப்
போனது பாரங்கள்

வாரம் ஒரு முறையாவது
வானம் பாருங்கள்

வாயைப் பிளந்து
காத்திருக்கிறது !!!

இரா. கணேஷ்

Series Navigation

இரா. கணேஷ்

இரா. கணேஷ்