வயது வரும்போது. .

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

நவஜோதி ஜோகரட்னம்.


லண்டன்.

வயது வரும்போது
கடகடத்துச் சிாிப்பேன்
இளமையை முழுமையாய்
வாழ்ந்திட்ட
மகிழ்ச்சியில்

நரைகள் தோன்றும்
நித்திரை அதிகம்
அசையும் வாசனை
தலையசைத்த கனவுகள்
முடிச்சுக்கள் அவிழ்ந்து
மெதுவாகப் பார்க்கும். .
எத்தனை சந்தோஷங்கள்!
இன்ப வேளைகள்!
காதல் – கருணை – துக்கமும்தான். .
நினைவுகள் ஆழ்ந்து கண்
குமிழ்களை உடைக்கும். .
உண்மை அன்பு எத்தனை
அழகைக் காட்டும்!
ஒரு மனிதனின் சிலுவை
என்னைச் சுமந்து வரும். .
அந்த வியாகுலங்களில். .
இனிமையில். .
காதலில் . .
எனது முகங்கள் மாறி மாறி வரும். .
எனக்குள்
முன்னும் பின்னும்
உண்மையும் பொய்யும்
கவிதையில் படிந்து
கலவையாகி. . தேயும். .

வாிசையாக வந்து போகும்
வழமையான நினைவுகளில்
வயது வந்தாலென்ன
வாய்விட்டுச் சிாிப்பேன்
மலைகளின் மேலால்
மிதக்கின்ற வானத்தில்
அத்தனை கோடி
நட்சத்திரங்களுக்கூடாக
அந்த முகம்
என்னைப் பார்த்து
சிாிக்கின்ற வேளையெல்லாம் . .. (22.9.2005)

Series Navigation

நவஜோதி ஜோகரட்னம்

நவஜோதி ஜோகரட்னம்