லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

ஸ்ரீராம் சுந்தர் சவுலியா


(டச்சு மொழியிலிருந்து ஆன் ரைட், ரெனே ஃபென்பி இருவராலும் மொழி பெயர்க்கப்பட்டது)

‘I prefer to die with my head held high, unshakeable faith and the greatest confidence in the destiny of my country rather than live in slavery ஸ ‘

– Patrice Lumumba from his death cell, January 1961

அடிமையாய் இருப்பதைக் காட்டிலும், என் சிரம் உயர்ந்திருக்க, அசையாத நம்பிக்கையுடன், என் தேசத்தின் எதிர்காலம் பற்றிய பெரும் கனவுடன் சாவதையே நான் விரும்புகிறேன்.

– மரண தண்டனைச் சிறையிலிருந்து பாட்ரிஸ் லுமும்பா ஜனவரி 1961

ஆப்பிரிக்காவின் புதல்வர்களில் முக்கியமானவரான பாட்ரிஸ் எமெரி லுமும்பாவின் பிறந்த நாள் சூலை 2. அவர் இறக்கும்போது அவர் வயது 36தான். துப்பாக்கிக்குண்டுகள் அவர் மீது பொழிந்த அந்த நாளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், பெல்ஜிய அரசும், அமெரிக்க அரசும், அப்போதுதான் சுதந்திரமடைந்திருந்த காங்கோ நாட்டில் , தம்முடைய கைப்பாவைகளை ஏவி தீட்டிய திட்டத்தின் விளைவாக அவர் மரணமுற்றார். பெல்ஜிய சமூகவியலாளரான லுடோ டெ விட்டே அவர்கள் எழுதிய டச்சு புத்தகத்தின் முதல் பதிப்பு 1999இல் வெளிவந்தபோது, பெல்ஜிய அரசு பாராளுமன்ற விசாரணை ஒன்றை ஏற்படுத்தி வெகுகாலமாக எல்லோருக்கும் தெரிந்த பெல்ஜிய அரசின் இந்த சதிவேலைகளை ஆராய கமிட்டி ஏற்படுத்தியது. இந்த விசாரணை, எல்லா தடயங்களுக்கும் மாறாக, காஸ்டோன் எய்ஸ்கென் Gaston Eysken அவர்களது மந்திரிக்குழு ‘தார்மீகப் பொறுப்பு ‘ ஏற்க வேண்டும் என்று கூறி, பாட்ரிஸ் லுமும்பாவின் கொலையை பெல்ஜியம் ஆணையிடவில்லை என்று தீர்ப்புக் கூறியது. லுமும்பா குடும்பத்தினரிடமும் காங்கோ மக்களிடமும் பெல்ஜிய அரசாங்கம் மன்னிப்புக் கோரி, கண்துடைப்பு வேலை செய்து, பெல்ஜிய அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்களை காப்பாற்றிக்கொண்டது.

டே விட்டே- எழுதிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உலகத்தின் முன்னர் வைக்கப்பட்டு, நாற்பது வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும் பெல்ஜிய அரசாங்கத்தின் கயமைத்தனத்தை தெளிவாக முன்வைக்கிறது. பெல்ஜியத்தின் பிரதம மந்திரி, வெளியுறவுத்துறை அமைச்சர், ஆப்பிரிக்க விஷயங்களின் அமைச்சர், காங்கோவுக்கான பெல்ஜியத் தூதுவர் ஆகியோர்கள் மோசமான குற்றவாளிகள் போல சதித்திட்டம் தீட்டி, அப்போதுதான் சுதந்திரமடைந்திருந்த காங்கோவை மீண்டும் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவரவும், மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பாட்ரிஸ் லுமும்பாவை கொலை செய்யவும் துணிந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது பெல்ஜியம். 1961இல் நடந்த கொலையை ‘பான்டுக்களிடையே நடந்த கலவரம் ‘ என்று பிரச்சாரம் செய்து அது காங்கோவின் உள்நாட்டு விஷயம் என்றும், மேற்குலகுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என ஒதுக்கியது எவ்வளவு பெரிய கயமைத்தனம் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. இது, டே விட்டே சொல்வது போல, ‘மேற்கத்திய அதிகார வர்க்கம் தன்னுடைய லாபம் குறையலாம் என வரும்போது எந்த அளவுக்குச் செல்லும் என்பதன் மகத்தான உதாரணம் ‘ (பக்கம் xxv)

நவகாலனிய கூட்டின் முதல் எதிரி

டே விட்டேயின் மையமான கோட்பாடு, லுமும்பா, எப்படி பெல்ஜிய காலனியாதிக்கக் காரர்களை அச்சுறுத்தலானார் என்பது. காலனியாதிக்கத்தின் எஜமானர்களை விரட்டி, காலனியாதிக்கத்தின் வேரைக் களைய அவர் முயன்றார். பெல்ஜியக் காலனியாதிக்கத்தின் தூண்களான சுரங்கக் கம்பெனிகள், வெள்ளை ராணுவ அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர், மத மிஷனரிகள், – காங்கோவின் விடுதலைக்குப் பின்னரும், முக்கிய பதவிகளை வகிக்கலானார்கள். கூடக் கறுப்பு அதிகாரிகளும் இதற்குத் துணை. சூலை ஆகஸ்ட் 1960-ல் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே, இந்தப் பதவிகளை ஆப்பிரிக்கமயமாக்க பாட்ரிஸ் லுமும்பாவும், பியரி முலேயும் முயன்றார்கள்.

பெல்ஜியன் அரசின் பதுவின், பிரதமர் எய்ஸ்கன்ஸ், வெளியுறவு மந்திரி விக்னி ஒன்று சேர்ந்து , தாதுப் பொருட்கள் மிகுந்த தெற்குப் பகுதியான கடாங்காவை ‘லுமும்பாவின் காங்கோ ‘ விற்கு எதிராக பிரிவினைக்குத் தூண்டினார்கள். பிற்போக்குவாதியான மொசே ட்ஷோம்பெயை கடாங்காவின் சட்டபூர்வமான பிரதமர் ஆக்கிவிட்டு, லுமும்பாவின் காங்கோவிலிருந்து விடுதலை பெற போராடுமாறு, ஆயுதங்கள் அளித்தார்கள். செப்டம்பரில் விக்னி காங்கோ-பிராஸாவில் நகரில் இருந்த தூதுவரகத்திற்ற்கு எழுதினார் : ‘லுமும்பாவைச் செயலிழக்கச் செய்வது இவர்களின் பணி. ‘ (பக் 23). பெல்ஜியத்தின் ஆப்பிரிக்க விவகார மந்திரி டிஅஸ்பெரெமாண்ட் லிண்டன் அக்டோபரில் ஒரு சதித்திட்டம் தீட்டி, பணம் வாங்கிக் கொலை செய்பவர்களி லுமும்பாவிற்கு எதிராக ஏவினார். ‘ லுமும்பாவை நீக்குவது தான் நிச்சயம் நம் நோக்கம். ‘ (பக் 25).

இதன் நடுவில் சி ஐ ஏ தலைவர் ஆலன் டல்லஸ் ஐசன்ஹோவரிடம் கூறினார் : ‘லுமும்பா, காஸ்ட்ரோ மாதிரி, காஸ்ட்ரோவைக் காட்டிலும் கூட மோசம் என்று சொல்லலாம். ‘ லுமும்பாவை ‘நீக்குவது ‘ பற்றி விவாதிக்க அவசரமாக தேசியப் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டலானார். ரசாயன விஞ்ஞானி காட்லீப் விஷவாயு மூலம் லுமும்பாவைக் கொல்ல முயலுமாறு, காங்கோவிற்கு அனுப்பப்பட்டார். வாடகைக் கொலைகாரன் ஒருவன் நவம்பரில் அனுப்பப் பட்டான். எதையும் செய்யக்கூடியவன் அவன். ஆனால் தாக்கப் பட்ட லுமும்பா, வீட்டுக் கைதியாய் இருந்த நிலையிலிருந்து தப்பிவிட்டார். மொபுடுவின் ஆட்களுக்கு பெட்டியில் பிதுங்கப் பிதுங்க டாலர்களும், ஆயுதங்களும் தந்து , லுமும்பாவுக்கு எதிராக செய்லபடுத்தத் தூண்டினர், 1960, நவம்பர் 24 தேதியன்று, காசா வுபு, லியோபால்ட்வில்லில் சட்டத்திற்குப் புறம்பான ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தியபோது, அமெரிக்கா காங்கோவின் உண்மையான தலைவராய் ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற உதவியது. ஐ நாவின் சிறப்பு தூதுவர் ராஜேஸ்வர் தயாள் நியூயார்க்கில் நடந்த வாக்கெடுப்பு ‘ மிரட்டலும், அழுத்தங்களும் நாடுகள் மீது எப்படி திணிக்கப் படுகிறது, வாக்குகள எப்படி வாங்கப் பட்டன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் ‘ என்றார். (பக் 51).

லுமும்பா கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் (அமெரிக்கா- சோவியத் யூனியனுக்கிடையே நடந்த) பனிப்போரின் காலமானதா, டல்லஸ் மற்றும் லியோபால்ட்வில் சி ஐ ஏ தலைவர் லாரி டெவ்லின் இருவரும் செய்த எச்சரிக்கைகள் அமெரிக்காவை மாறச் செய்தது. லுமும்பாவிற்குப் பின்பு ‘சி ஐ ஏவின் சர்வாதிகாரி ‘யான ஜோசப் மொபுடுவுடன் அமெரிக்கா கொண்ட உறவை ஏற்படுத்தியது.

லுமும்பா அதிகாரம் இழந்து சிறைப்பட்ட போதிலும், மக்களிடையே அவர் செல்வாக்குக் குறையவில்லை. இதனால் ப்ரூஸெல்ஸ்(பெலியம் தலைநகர்) மற்றும் பெல்ஜியத்தின் அடிவருடிகள் உறக்கமிழந்து தவித்தனர். தேசிய எழிச்சி நேருமோ எனப் பயந்தனர். பிரிக்கப்ப்ட்ட கடாங்காவில் தான் லுமும்பாவின் படுகொலை மிகக் குறைவான அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும். லுமும்பாவைப் படுகொலை செய்யக் கனவு கண்டனர் இவர்கள். லுமும்பாவை எலிசபத்வில்(கடாங்காவின் தலைநகர்) மாற்றும் கருத்தும் செயலும் பெல்ஜியத்தின் பொறியாளர்களும் வானொலி இயக்குநர்களும் சேர்ந்து செய்த ஒன்று. ஒரு தனி விமானத்தில் அவர் கொண்டுசெல்லப் பட்டார். பெல்ஜியத்தின் கட்டளைப்படி லுமும்பாவும் அவர் தோழர்களும் , உணர்விழக்கும் வரையில் சித்திரவதை செய்யப்பட்டனர்.ஜனவரி 17-ல் நிறைவேற்றப் பட்ட இந்த, இரக்கமற்ற , கொடூரமான மரண தண்டனை, உள்ளூர் ஜெனரல்கள் கட்டுப்பாடற்று நிகழ்த்தப் பட்ட ஒன்றல்ல. மாறாக ப்ரூசெல்ஸ் ஆப்பிரிக்காவிற்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்த அன்றிலிருந்து திட்டமிட்டு, தூரத்திலிருந்து இயக்கிய ஒரு செயலாகும். பெல்ஜியமு, வெளிநாட்டு ஏடுகளும், லுமும்பாவின் படுகொலை , ‘பண்டு ஆதிவாசிகள் மனநிலை ‘யினால் , ஆதிவாசிகளின் வெறுப்பால் செய்யப்பட்ட ஒன்று என்று பிரசாரம் செய்து வந்திருக்கின்றனர். லுமும்பாவின் படுகொலை நடந்து , நாற்பது வருடங்கள் கடந்தும் கூட இந்தப் பொய் புரட்டுகள் முடியவில்லை.

ஜனவரி 17- 1961 நிகழ்வுகளின் பின்விளைவுகள்

லுமும்பாவின் சோகமான மரணம் காங்கோவின் சுயாட்சியை நசுக்கி, ராணுவ சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்றது. ஆப்பிரிக்க நாடுகளில் கனிம்வளம் மிகவும் பெற்ற காங்கோவை உள்நாட்டுப் போரிலும் , வறுமையிலும் தள்ளியது. 1964-ல் ஐ நா செய்திக்குறிப்பு : ‘ பெல்ஜியத்தின் வியாபாரிகள் காங்கோவின் அரசு மீதும், பொருளாதாரத்தின் மீதும் முழுமையான ஆக்கிரமிப்பைச் செலுத்த என்ணுகின்றனர். நவகாலனியத்தின் முன்மாதிரியாய் இது திகழும் . ‘ ராணுவமயமாதலும், மக்களை அச்சுறுத்தி சமனப் படுத்தலும் வெகு வேகமாய் நடைபெற்றது. (பக் 164). ஆப்பிரிக்கா முழுமையும் விடுதலைப் போர்கள் முடங்கலாயின. லுமும்பாவின் படுகொலையினால் பிற்போக்கு சக்திகள் மிக வேகமாய் மீண்டும் காலூன்றின. அங்கோலாவிற்கு விடுதலை தருவதை போர்த்துகல் ஒத்திப் போட்டது. அபார்தீட் இனவெறிக்கு எதிராய் தென் ஆப்பிரிக்காவில் எழுந்த இயக்கமும் பின்னடைவு கொண்டது. ரொடாசியாவில் அயன் ஸ்மித்தின் குடியேறிகளின் சாம்ராஜ்யம் வலுப் பெற்றது. 1965-ல் அல்ஜீரியாவில் பென் பெல்லாவின் அரசு கவிழ்ந்தது. பெல்ஜியம் காங்கோவில் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனம், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்த எல்லா காலனியாதிக்கக்காரர்களுக்கும் மிகுந்த பலனளித்தது.

முடிவுரை

‘ உண்மையான தேசிய ஜனநாயகப் புரட்சியை காங்கோவில் அறிமுகம் செய்ய முயன்ற பாட்ரிஸ் லுமும்பாவின் செயல், உலகில் மக்கள் விடுதலைக்காகச் செயல்பட்ட மேலான வர்களின் வரிசையில் அவர்களை நிறுத்தும் ‘ (பக் 181). அவ்ருடைய வாழ்க்கை இனிவரும் தலைமுறைகளுக்கும் காங்கோ, ஆப்பிரிக்காவின் மக்களுக்கு ஆதர்சமாய் இருக்கும். உலகின் மற்றபகுதிகளில் இருக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும். அவர் இறக்கும் போது கூட மிக சாந்தமான கம்பீரமும், தீயசக்திகளுடன் சமரசம் செய்துகொள்ளாத மேன்மையும் கொண்டிருந்ததை, பெல்ஜியம் – காடங்காவின் கொலையாளிகள் பதிவு செய்துள்ளனர். மரணத்தை எதிர்நோக்கியிருந்தபோதும், மிகுந்த துணிவும், (ஏகாதிபத்திய சக்திகள் மீது) பெருவெறுப்பும் கொண்டிருந்தார். ஏகாதிபத்தியத்தின் சொல்லைக் கேட்டு நடந்துகொண்டிருந்தால் அவர் எளிதாக தன் விடுதலையைப் பெற்றிருக்க முடியும். மொபுடுவின் பங்களிப்பால், உள்நாட்டுப் போரிலும், வெளிநாட்டுச் சச்சரவிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் காங்கோவிற்கு லுமும்பாவின் உதாரணவாழ்க்க தான் வழிகாட்டியாய் நிற்கிறது.

பெல்ஜியத்தைப் பொறுத்தவரையில், மனிதத்துவத்திற்கு எதிராக நிகழும் குற்றங்கள் எங்கு நடந்தாலும் பெல்ஜியம் அதைக் கண்டித்து நீதி வழங்க முயலும் என்று பெருமையடித்துக் கொள்வதைப் பற்றி தோலுரிக்கிறார். ‘ பெல்ஜியத்திற்கு ஜனநாயகம் பற்றியோ, மனித உரிமை பற்றியோ பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. ‘ (பக் 170).

டாக் ஹாமர்க்ஸ்ஜோல்ட்-ஐயும், (ஐ நாவின் அப்போதைய பொதுச் செயலாளர் -மொ பெ), ஐ நாவையும் லுமும்பா படுகொலையில் இணைக்கச் செய்யும் அரைகுறை முயற்சியைத் தவிர , இந்தப் புத்தகம் மிகுந்த ஆய்விற்குப் பின் எழுதப் பட்டுள்ளது. (ஐ நா காங்கோவில் கொண்டிருந்த கடமை, ஆயுதம் தாங்கி போரிடும் அளவு அன்று இல்லை). அமைதிப் போராளிகளாலும், மனிதத்துவத்தை மதிப்பவர்களாலும் அவசியம் படிக்கப் படவேண்டிய புத்தகம் இது. ஒரு ஃப்ரான்ஸ் காஃப்கா நாவலைப் போல , மனதை உறுத்துகிற, உலுக்குகிற ஒரு படைப்பு இது. (முக்கியமாய் ‘வீழ்ந்த மாமனிதனை ‘ சின்னாபின்னப் படுத்தி, பிணத்தை எரிக்கும் காட்சி – நிரூபணங்களை அழிக்கவாம் – ) எனினும், இதன் முக்கியமான ஒட்டுமொத்தமான செய்தி நம்பிக்கை ஊட்டுவதே. லுமும்பாவின் நினைவும் செயலும், காங்கோவையும் ஆப்பிரிக்காவையும் கிளர்ந்தெழச் செய்து, பழைய எஜமானர்களிடம் சரணடைந்து மீண்டும் பாழாகிவிடாமல் காப்பாற்றும்.

லுமும்பா படுகொலை : வெர்சோ புக்ஸ்- 2001. விலை 27 டாலர்.

The Assassination of Lumumba. Verso Books, 2001. ISBN: 1-85984-618-1. Price: US$27. 224 pages.

Remembering an African martyrdom

A review of Ludo De Witte ‘s The Assassination of Lumumba (translated from the Dutch by Ann Wright and Renee Fenby).

By Sreeram Chaulia

Series Navigation

ஸ்ரீராம் சுந்தர் சவுலியா

ஸ்ரீராம் சுந்தர் சவுலியா