ரெஜி

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

யமுனா ராஜேந்திரன்


ரெஜி சிறிவர்த்தனா தனது எண்பத்து இரண்டாம் வயதில் டிசம்பர் 14 ஆம் திகதி செவ்வாயக்கிழமை கிழமை கொழும்பில் மரணமுற்றிருக்கிறார். ரெஜி சிறிவர்த்தனாவை ஒரு எழுத்தாளர் என்ற வகையிலேயே அறிந்திருக்கிற ஒருவர் அவர் குறித்து என்ன விதமான சித்திரத்தை வழங்குதல் சாத்தியம் ? அவருடன் பழகியவர்கள், மண்ணில் கலந்தும், வரலாற்றில் புரண்டும் அவரோடு நடைபழகிய ஒத்த வயதுள்ளவர்கள், குறைந்த பட்சம் அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அப்பால் ஒரு வாசகன் ஒரு எழுத்தாளனை எந்த வகையில் கையகப்படுத்தல் சாத்தியம் ? புத்தொன்பதாம் நுாற்றாண்டில் இறுதியில் தோன்றிய உலகைப் புரட்டிய ஒரு சித்தாந்தம், அதனது எழுச்சி வீழச்சி அதன் மீதான மறுபரிசீலனை போன்ற பொதுத் தளங்கள் ஒரு மார்க்சிய மாணவனுக்கும் ரெஜிக்கும் இடையிலான சந்திக்கும் தளமாக, பொதுப் புலமாக ஆகமுடியும். உலகப் பரப்பெங்கும் தேடித்திரிந்து கற்க முனைந்த தமிழ் மார்க்சியர் அனைவருக்கும் றெஜியைத் தெரியும். றெஜி ஒரு சுதந்திர மார்க்சியர். கட்சிகளுக்குள் அடைபடாத புரட்சிகர அறவியலாளர். கவிஞுர். நாடகாசிரியர் ஆங்கிலப் பேராசிரியர். மொழிபெயர்ப்பாளர். பத்திரிக்கையாளர். வரலாற்றாசிரியர். திரைப்பட வசனகர்த்தா. லெஸ்டர் ஜேம்ஸ் பிரிசின் கெம்பரலியாவுக்கு அவர் வசனமெழுதினார். ரஸ்யக் கவிஞுர்களை அவர்தம் அசல் மொழியான ரஸ்யனில் படித்து மொழிபெயர்த்தார். ஸ்பானிஸ் பிரெஞ்சு இத்தாலிய மொழிகளும் அறிந்தவர் ரெஜி. அசலாகக் கவிதைகளும் எழுதிய படைப்பிலக்கியவாதி அவர். மிகநுட்பமான இலக்கிய விமர்சகர் மட்டுமல்ல கருத்தியல் ரீதியில் கற்றுத் துறைபோகிய படிப்பாளி அவர்.

1981 ஆம் ஆண்டு யாழப்பாண நுாலகம் சிங்கள அரச படைகளால் கொழுத்தப்பட்டதனையடுத்து தனது சொந்த நாலகத்தின் சேமிப்பகளை புனரமைக்கப்பெறும் யாழ் நுலகத்திற்கு அளிப்பதென அறிவித்தார் றெஜி. தன்னை ஆகர்சித்த புஸ்கினைப் படிப்பதற்காக ரஸ்ய மொழி கற்ற அவர் ஸ்டாலினிய ஒடுக்கமுறையின் இலக்கிய எதிரியக்கமாக ஆகின அன்னா அக்மதோவாவின் பாதிப்பில் பிற்காலத்தில் அசலாகக் கவிதைகள் எழதத் துவங்கினார் என்கிறார் கல்வியியளாளர் குனதிலகே. அவரது ஆளுமை போலவே அவரது செவ்வியல் இலக்கிய வெளிப்பாட்டு வகைக்கான உதாரணமாக அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. புதியவகை வரலாறு எழுதுதுல் எனும் அடிப்படையில் among my souveneirs என ஒரு நாவலையும் எழுதியிருக்கும் றெஜி, ஆங்கில சிங்கள மொழிகளில் வெளியான சிறிலங்கா பாட நுால்களில் வெளிப்பட்ட தமிழர் விரோத வரலாறு எழுதுதல் குறித்த விமர்சனத்தை தனது எழுத்துக்களில் முன்வைத்தார். அவருடைய 1992 ஆம் ஆண்டுக் கட்டுரையான யெவழையெடnational Identity: contents of education and ethnic perceptions . இவ்வகையில் காலனியாதிக்கத்திற்குப் பின்னான இலங்கை அரசின் சிங்களமயமாகின கல்விக் கொள்கையின் இனவாதத் தன்மையினை அலசும் முக்கியமான பங்களிப்பாகிறது.

ஏண்பதுகளின் துவக்கத்தில் ரெஜி சிறிவர்த்தனா, குமாரி ஜெயவர்த்தனா போன்றவர்களைதி லங்கா கார்டியன் போன்ற பத்திரிக்கைகளை தேடிப்படித்த தமிழக மாரக்சியர்கள் அதிகம். பெண்ணிலைவாதத்தை மூன்றாம் உலக நாடுகளின் குறிப்பான பின்னணியில் வைத்து விளக்கியவர் குமாரி ஜெயவர்த்தனா. ஸ்டாலினியம் குறித்த விமர்சனத்தையும் இனத் தேசியதத்தின் மானுட உள்ளடக்கத்தையும் விசாரணைக்கு உட்படுத்தியவர் ரெஜி சிறிவர்த்தனா. ஸ்டாலினியம் தொடர்பான விவாதங்களில் அவர் எழுதிய புகாரின் மற்றும் அவரது துணைவியார் தொடர்பான எழத்துக்களும்> வன்முறை குறித்து லெனின் டிராட்ஸ்க்கி தொடர்பான அவரது எழுத்துக்களும் அதிகாரம் குறித்த தென் ஆசிய மார்க்சிய விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. லெனின் டிராட்ஸ்க்கி போன்றவர்களின் தொடர்ச்சியாக ஸ்டாலினிய வன்முறையைக் காண்கிறவர்களின் தடத்தில் நின்றதான அவரது விமர்சனங்களை ஓப்பக் கொள்ள இயலாதவர்களும் கூட அவருடைய கருத்தை மதிக்கவே செய்தார்கள். சோவியத் யூனியன் தொடர்பான அவருடைய குறிப்பிட்ட சில எழுத்துக்கள் நுஹ்மான் சேரன் போன்றோர் தொகுத்த சோவியத் யூனியனின் உடைவு எனும் நூலில் இடம் பெற்றிருந்தன. பொருளியல், அரசியல் அதிகாரம், தேசிய இனப் பிரச்சினை என அனைத்திலும் பரவியிருநத ஜனநாயகமின்மையே சோவியத் யூனியனின் உடைவுக்கான பிரதானமான காரணமாக ரெஜி தனது எழுத்துக்களில் தெரிவித்திருந்தார்.

இலக்கியம் குறித்த ரெஜியின் எழுத்துக்களில் நான் வாசித்த முக்கியமான மூன்று கட்டுரைகள் சிவானந்தனின் நினைவுகள் மரணிக்கும் போது நாவல் குறித்த அவரது விமர்சனக் கட்டுரையையும்> பிரவாதா இதழில் வெளியான the politics of literary theory மற்றும் language and ideology எனும் இரு கட்டுரைகளையும் (an introduction to social theory: colombo) ஏன்னால் குறிப்பிட இயலும். thatched patio எனும் பெயரில் கொழும்பிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த கோட்பாட்டிதழின் ஆசிரியர் குழவில் அவர் இருந்தார். international centre for ethnic studies இனால் வெளியிடப்பட்டு வந்த இந்த ஆய்விதழ் தற்போது nethra எனும் பெயரில் வெளியாகிறது. பிரவாதா நேத்ரா இதழ்கள் ஒவ்வொன்றிலும் ரெஜியின் கட்டுரைகளை நாம் காணலாம். மனித உரிமையாளர் வரதகுமார் இயக்குனராயிருந்து செயலாற்றும் இலண்டன் தமிழ் நடுவத்திலிருந்த புிரவாதா இதழ்களின் அனைத்துப் பிரதிகளிலும் ரெஜியின் எழுத்துக்களை தேடிப்படித்தமை இப்போது ஞுாபகம் வருகிறது. சிவானந்தனின் நாவலில் பிரதான நாயகனின் பத்திரத்தின் நம்பகத் தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியிருந்த ரெஜி கலாச்சார தர்க்கம் அல்லது கலைப் பரிமாணம் எனும் அளவில் அப்பாத்திரம் நிற்கமுடியாது தேய்ந்ததொரு பாத்திரம் என தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். அமைப்பியல்> பின் அமைப்பியல்> அதனையொட்டி எழுந்த கட்டுடைப்பு சார்ந்த மொழியில் விமர்சன அடிப்படைகளைத் தனது இரு கட்டுரைகளில்; கேள்விக்கு உட்படுத்தியிருந்தார் ரெஜி. ரெஜி சிறிவர்த்தனா எப்போதுமே மறுமலர்ச்சியுக மதிப்பீடுகளிலும் மனிதனது உரிமைகளிலும் அதிகம் கவனம் செலுத்தியவர். அமைப்புக்க எதிரான மனித இடையீடு என்பதன் அடிப்படையிலேயே அமைப்பியல் சார்ந்த மொழி அடிப்படைகளையும் அவர் நிராகரித்தார்.

இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தையடுத்த நாட்களில் ஸ்டாலினிய எதிர்ப்பு டிராட்ஸ்க்கியர்களின் லங்கா சம சமாஜக் கட்சியில் நடவடிக்கையாளராக இருந்த அவர்> ஸ்டாலினியக் குணங்களை ரஸ்யத் தலைவர்களான டிராட்ஸ்க்கி லெனின்; போான்றவர்களிடமும் கண்டதையனையடுத்து டிராட்ஸ்க்கிய லெனினிய வகை லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்தும் அவர் வெளியேறினார். எழுபதுகளைத் தொடர்ந்து உலக தேசிய விடுதலைப் போராட்ட அரசியலும்> ஜேவிபி இயக்கத்தின் வன்முறை அரசியலும் – இனத் தேசிய சோசலிசம் எவ்வாறாக தமிழர் விரோத பாசிசமாகவும. அதேவேளை சேகுவேரா வழி ஆயுதப் புரட்சி எனும் திரிபுபெற்ற கோசமாகவும் வெளிப்பட முடியம் என்பதற்கு ஓரு வரலாற்று உதாரணம் ஜேவிபி இயக்கம்; – அவ்வியக்கம் இலங்கை அரசினால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டமையும்- தமிழ் தேசிய ஆயுத அரசியலின் தோற்றமும்,அனைத்துத் தரப்பினராலும் வெகுமக்களின் மீதும் அறிவுஜீவிகளின் மீதும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களும் றெஜியிடம், மனிதனது அடிப்படை உரிமைகள் குறித்த அதீதத் தேட்டத்தை எற்படுத்தியது என நாம் அவதானிக்க முடியம்.

ஸ்டாலினிய அனுபவங்கள், பின் சோவியத் அனுபவங்கள், கிளர்ச்சி அரசியல்காரர்களின் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றக்கு இடையில் ஒரு இடையறாத தொடர்ச்சி இருப்பதாக அவர் அவதானித்தார் என்பதற்கான சாட்சியம் போலவே அவரது கோட்பாட்டுச் செயல்பாடுகள் இருந்தன. 1989 ஆம் அண்டு அவர் நிகழ்த்திய கந்தசாமி நினைவுப் பேருரையான violence and human rigths அவருடைய இனங்களுக்கு அப்பாலான மனித உரிமை அக்கறையினைப் புரிந்து கொள்ள சரியான துவக்கப் புள்ளியாகிறது. அடையாள அரசியலும், விளம்புநிலை மையஅரசியலும் முன்னுக்கு வந்திருக்கும் நம் காலத்தில்> பிரபஞ்ச மதிப்பீடுகள், அடிப்படை மனித உரிமைகள், ஜனநாயகத்துடன் இணைந்த சமத்துவம் போன்றவற்றை அவாவிய மறுமலர்ச்சி யுக மனிதனான ரெஜி சிறிவர்த்தனா ஒரு விநோதமான மனிதனாகத் தோன்றலாம். அரசியல் தலைவர்களும், அரசுத் தலைவர்களும் அல்ல மாறாகத் தத்துவவாதிகளும் அறிவியலாளர்களும் கலைஞுர்களும் சாதாரண மனிதர்களும்தான் உலகை வாழ்வதற்கு உரியதான அழகான இடமாக மாற்றுகிறார்கள் என நம்புகிறவர்களுக்கு ரெஜி போன்றவர்கள் என்றும் ஆதர்ச மனிதர்களாகவே இருப்பார்கள்.

ரெஜி சிறிவர்த்தனா கடந்த சில மாதங்களாகவே பெரும்பகுதி பிரக்ைஞுயற்ற நிலையில் இருந்திருக்கிறார் என அவரது அருகிலிருந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரெஜியின் எழுத்துக்கள் இரு தொகுதிகளாக வரவிருக்கிறது. இலக்கியம் தொடர்பான அவரது எழுத்துக்கள் ஒரு தொகுதியாகவும், இலக்கியம் சாரா பிற எழுத்துக்கள் பிறதொரு தொகுதியாகவும் வெளியாகவிருக்கிறது. இனத்துவ ஆய்வுக்கான சர்வதேசிய மையம் வெளியிடவிருக்கும் இந்த நுால்களின் தொகுப்பாளராக தமிழ் இலக்கியமும் உலக இலக்கியமும் அறிந்த ஏ.ஜே.கனகரத்னா செயலாற்றி வருகிறார். றெஜியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 16 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு கனத்தை மயானத்தில் அவரது நண்பர்களும் இலக்கிய அபிமானிகளும் பங்கு பெற நடைபெற்றிருக்கிறது. முழுமையான மனிதன் கலைஞுன் என்பார்கள். இறுதி நோக்கில் கலையை மனித விமோசனத்தின் ஊற்றாகக் கண்ட சென்ற தலைமுறையைச் சேர்ந்த செவ்வியல் மனிதராக ரெஜி இருந்தார் என்று சொல்வதுதான் அவருக்குகந்த மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

—-

நன்றி

றெஜி சிறிவர்த்தனாவின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு விழாவெடுத்த சர்வதேசிய இனத்துவ ஆய்வு மையத்தின் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக 2002 ஆம் ஆண்டில் றெஜி எழதிய birthday apology and apologia : 80 iambic pentameters for my 80 years எனும் கவிதையிலிருந்து சில வரிகள்.

பிற தொத்து வியாதிகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருக்கிறேன்.

பினநவீனத்துவம் ஒன்று கட்டற்ற கவிதை பிறதொன்று

எனக்கு ரொம்ப மகிழச்சி

என் காலஞ்சென்ற சகோதரனுக்கு வந்தமாதிரி எனக்கு

சிங்கள தேசியக் காய்ச்சல் தொற்றவில்லை

ஆரம்ப மாரக்சியத் தாக்கம்

அதனைப் பொறுப்பெடுத்துக் கொண்டுவிட்டது.

எழுதுதலில்;> நான் விரும்பும் அச்செயல்பாட்டில்;>

இன்னும் நான் புனிக்காலத்தையும் மீறிநிற்கும்

உன்னதப் படைப்புகள் எதனையும் உருவாக்கிவிடவில்லை

அவ்வப்போது யாரையேனும்

ஒரு கவிதையால் அல்லது நாடகத்தினால்

சந்தோசப்படச் செய்கிறேன் என நான் நம்புகிறேன்.

இலக்கிய வரலாற்றில் எனது நடுகல்

சின்ன எழுத்தில்

அடிக்குறிப்பாக இருக்கமானால் அது போதும் எனக்கு

மூப்படையும் போது

சுலபமானவை என நீங்கள் நம்பியிருந்தவை

சுலபமானவையாக இருக்காது

அலுவலகக் கதவை அன்மிக்க இருக்கும் மூன்றுபடிகள்

எவரெஸ்ட்டை எட்டும் தீரச்செயலாகும்;

தெருவைக் கடத்தல் இடர்நிறைந்த நீள்பயணமாகும்

எவ்வாறாயினும்

மூப்படைவதால்; சலுகைகளும்; இருக்கிறது

நீங்கள் மனவளர்ச்சி பெற்றிருப்பீர்கள்

புனிதனாக அல்லாது இருக்கலாம்

விவேகமான மனிதனாக ஆகியிருப்பீர்கள்

அடையவேண்டும் எனும் தீயஎண்ணத்தினால்

ஆட்டுவிக்கப்படாமலேயே

ஒரு பெண்ணின் நளினத்தையும் அழகையும் ரசிப்பீர்கள்

அத்யந்தமானது என ஒரு காலத்தில் நீங்கள் போற்றிய

புத்தகங்களும்; இசைத் தகடுகளும் இப்போது சுமையாகும்

இழந்துவிட சந்தோசப்படுவீர்கள்

பாதி வெறுமையான அலமாரிகளைப் பார்ப்பது கூட மகிழ்ச்சியாவிருக்கும்

ஆகவே நண்பர்களே

எனக்குப்; பிடித்தேயிராத ஒரு கவியின் வாரத்தைகளில் சொல்வதானால்-

சு+றைக் காற்றடித்து ஓய்ந்த துறைமுகம்

எனது அனைத்து நண்பர்களே-

பெயர் சொல்லிக் கொண்டு போக முடியாத அளவில் நிறையப் பேர்கள்-

கடந்த காலத்தில் உதவிய நண்பர்களே-

பெருநீர்ச்சுழிகளே பாறைகளே –

எனது மனமார்ந்த நன்றி

—-

yamunarn@yahoo.com

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்