This entry is in the series 20030215_Issue

பிரகாஷ் நாக்ராஜ்


பொன் கேட்டோம்

கொடுத்தாய்

பொருள் கேட்டோம்

கொடுத்தாய்

சொல்லியும் கேளாமல் உன்னை

கடவுள் ஆக்கினோம்

நீ மறுத்தாய்

எங்கள் சொல்

கேட்டுயிருந்தால்

கடயுளாகிய உன்னுடைய அயோத்தியா

உன்னுடனே இருந்திருக்கும்

ஆனால் மனிதனாக

வாழ்ந்த நீ

உயில் எழுத

மறந்து விட்டாய்.

தவறு செய்துவிட்டாய்

ராமா….

பூலோகத்தில் இன்று

எத்தனை பங்காளிகள்

உன் நிலத்தை பங்கிட!

மறுடியும் வேண்டுகிறேன்

நீ கடவுள்

என ஒத்துக்கொள்.

அப்படியாது இவர்கள்

உன் நிலத்தை விட்டு

விலகட்டும்.

pnagraj@netvigator.com

Series Navigation