ரசிக்க பிடித்தன..

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

மோஹனலட்சுமி


வேகமாய் மண்னை முத்தமிட்டு
உயிர் துறக்கும்
சிறு பனித்துளிகள்..

பூமி பெண்ணிற்கு
வெள்ளை ஆடை
அநிவித்து மகிழும்
முதிர் பனிகள்..

புத்தாடை வேண்டி
தன் உடை களைந்து
காத்து நிற்கும்
இலை இல்லா மரங்கள்..

மேகங்கள் கூடி
ஆதவன் மறைக்கும்
கண்ணாமூச்சி விளையாட்டு..

புது பெண்னின்
பொலிவுடன் முகம் கழவி
நிற்கும் தார் சாலைகள் – அவற்றில்
வேகமாய் வழுக்கி செல்லும்
நவீன வாகனங்கள்..

இவை எல்லாமே ரசிக்க பிடித்தன –
காது வரை மூடியும்
ஊசி முனை கொண்டு
பனி அரக்கன்
நரம்பு துளைக்கும் வரை!

***
T_Mohana_Lakshmi@eFunds.Com

Series Navigation

மோஹனலட்சுமி

மோஹனலட்சுமி