மெக்சிகோ பாணி கோழி டாக்கோ

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue


தேவையான பொருட்கள்

24 சோள ரொட்டிகள்

(இவை டோர்ட்டியா என்று அழைக்கப் படும் மெக்சிகோ பாணி ரொட்டிகள்.

இவை கிடைக்கவில்லை என்றால் சப்பாத்தியை உபயோகிக்கலாம்.)

2 கோப்பை கோழி துண்டமிட்டது- சிறிதாய்த் துண்டமிடவும் – வேக வைத்தது

2 கோப்பை முட்டை கோஸ் நறுக்கியது.

2 கோப்பை தக்காளி நறுக்கியது.

1 கோப்பை வெங்காயம் நறுக்கியது

1 கோப்பை செத்தர் சீஸ் தூள் சீஸ்

பிசைய :

1. அவகாடோ

அரை தேக்கரண்டி பூண்டு தூள்

1 தேக்கரண்டி மிகக் காரமில்லாத மிளகாய் சாஸ்

செய்முறை :

1. சப்பாத்திகளை மைக்ரோவேவ் அல்லது தவாச் சட்டியில் சூடு செய்யவும்

2. பிசைய என்று தரப்பட்டிருக்கும் பொருட்களைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்

3. ஒரு தட்டில் சப்பாத்தியை வைக்கவும்.

4. கோழி , தக்காளி, வெங்காயம், முட்டைகோஸை சப்பாத்தியின் மீது பரப்பவும்

5. பசையையும் இதன் மீது பரப்பி சீஸை இதன் மீது தூவவும்.

6. சப்பாத்தியை உருட்டிக் கொண்டு விடலாம்.

செய்ய எளிமையானது. சாப்பிட ருசியானது

Series Navigation