மூன்றாம் பிறை
Published March 9, 2003 • By
வேதா
வேதா

உன் மூச்சுக்காற்றிலும்
முழம் அளப்பேன்,
முகவரியேதும் இல்லாமலே!!
உன் பார்வைப் பூக்களை
பறித்துப் பறித்து
பாயாக்கித்தான் , தினமும் என் படுக்கையே!!
உன் அசைவின் துளிபோதும்
ஆதியும் அந்தமும்
அர்த்தம் செய்ய….
உன் தமிழை, அழகை,
அள்ளிக் குடித்தே
தீரும் என் பசி!!
என் விரல்நுனியில்
உன் ஸ்பரிசம், தீராநதியாய்…..
உன்னைத் தீண்டிய என் ரேகை,
உள்ளுக்குள் புழுதி கிளப்பியது குதிரை!!
ஊருக்குத் தெரிந்ததுதான்
உனக்கும் தெரிந்திருக்கும்….
இவன் விடுதலைக் கவிஞன் என்று!!
ஆனால், கவிதையே!
என் தேவையெல்லாம்,
தமிழ் விடுதலை மட்டுமல்ல,
உன் தகிப்பின் துவாரம் கண்ட
என் விடுதலையும் தான்!!
****
piraati@hotmail.com