This entry is in the series 20021027_Issue

சித்தார்த் வெங்கட்


பட்டம் வாங்கியாச்சு
ஒரு வேல தேடனும்
அம்மாவுக்கு பட்டு பொடவ
அப்பாவுக்கு VRS
பொறவு, தங்கச்சி கல்யாணம்
அதுக்கு முந்தி, டா கட பாக்கி
நாலு வருஷத்துல சொந்த கம்பனி……

இந்த சராசரியின்
அத்தனை கனவுகளும்
வெடித்துச் சிதறின
ஏதோ ஓர் கொள்கை கொம்பன்
இன்னோர் கொள்கை கொம்பனை
கொல்ல வைத்த வெடிகுண்டில்.

***
siddhu_venkat@yahoo.com

Series Navigation