முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

ஷேக் அஹமது யாசீன்


ஆசாரகீணனின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கட்டுரையான ‘முரன்புதிரானான சவுதி அரேபியா ‘ படித்து மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

திண்ணையின் பெரும்பாலான வாசகர்கள் இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் இருப்பதால் ‘முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானா ? ‘ என்று யாராவது கட்டுரை எழுதியிருந்தால் அதை தேடி மொழிபெயர்ப்பு செய்து எழுதினால் தேசப்பற்றில்லா முஸ்லிம் இந்தியர்களும் (தேசபக்தியின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை உரிமையாளர்கான RSS/சங்பரிவார் கூற்றுப்படி ) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ‘காலரைக்கால் ‘ இந்துக்களும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ‘அரை ‘ இந்துக்களும், இவர்கள் இருவரையும் விட சற்று உயர்ந்த சாதியினரான ‘முக்கால் ‘ இந்துக்களும் (காலரைக்கால், அரை, முக்கால் என்ற வகைப்படுத்தல் வேதங்களால் ‘முழு இந்துக்களாக ‘ அங்கீகரிக்கப்பட்ட ‘உயர் சாதி ‘ யினர்களிலிருந்து மற்றவர்களை வேறுபடுத்திக்காட்டத்தான்) தமிழர்களும் ‘அகண்டபாரதம் ‘ பற்றி இன்னும் அதிகமாக அறிந்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

எழுதும்போது இந்தியாவில் வசிக்கிறவர்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று மட்டும் மொட்டையாக குறிப்பிடாமல் ‘இந்து மதம் என்றால் என்ன ‘ என்று சிறு விளக்கம் மறக்காமல் எழுதவேண்டும் என்பது வேண்டுகோள். (அதுவே ‘தினத்தந்தி ‘யில் வெளிவரும் ‘சிந்துபாத் ‘ கதை போல ஆயிரக்கணக்கான வாரங்களுக்கு மேல் தொடர்ந்து முடிவே இல்லாமல் ‘சொதசொதப்பியே ‘ திண்ணையில் வெளிவந்த முதலும் இறுதியானதுமான ‘முடிவிலா தொடராக ‘ பெயர் போடும்.).

இந்த மதத்தை சீர்திருத்த முயன்று தோறுப்போனவர்களின் பெயர்களை ‘நீண்ட ‘ லிஸ்டாக ‘பின் இனைப்பில் ‘ தரலாம்.

அதிலே

நவீன சீர்திருத்த செம்மல் மான்புமிகு புரட்சிதலைவி,

இருக்கின்ற இந்துக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க மத மாற்றம் தடை சட்டம் சட்டம் இயற்ற அவதாரம் எடுத்த,

பாரத அன்னை ஈன்றெடுத்த ஒரே இந்து மதக்காவலர் தமிழக முதல்வர் செயலலிதாவைப்பற்றி முக்கியமாக பின் இணைபில் முன் இணைப்பாக போடவும்.

ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் அதை தேவன் என்றாலும் விட மாட்டேன் ‘ என்ற தலைவரின் வழி வந்ததாக கூறிக்கொண்டு தவறே செய்யாத தமிழக ‘சிறு தெய்வங்களை ‘ பிரானிகள் பலியிடுதல் தடைசட்டம் கொண்டு வந்து அவர்களையெல்லாம் முனியாண்டி விலாசிலிருந்து (Non-veg) ஆரிய பவனுக்கு (Vegetarian) விரட்டியதை

மறக்காமல் குறிப்பிடவேண்டும்.

இந்து சமயம் தோண்றிய நாள்களிலிருந்து இன்றுவரை சமய சீர்திருத்தங்கள் மட்டும்தான் நடைபெற்று வந்தன. ஆனால் முதல் முறையாக இந்து சமய தெய்வங்களையே ‘சீர்திருத்தி வரலாறு ‘ இந்த நூற்றாண்டில்தான் நடந்தது..

பெரியவர் ஜெயேந்திரர் அவர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள்..

இவ்வளவு நாட்கள் non-vegetarian ஆக இருந்து பழகிப்போன கருப்பன், முனீஸ்வரன் போன்ற சாமிகள் ‘ஆடு, கோழி ‘ உண்ண ஆசைப்பட்டு ‘முஸ்லிம் சாமிகளாக ‘ மதம் மாறாமல் இருப்பதற்காக இந்த சாமிகளுக்காக ஒரு மத மாற்ற தடை சட்டம் கொண்டு வருவது பற்றி செயலலிதாவிடம் நேரம் பார்த்து போட்டுக்கொடுங்கள்.

இந்து மதத்தின் பெரும் கூறான ‘வர்னாஷ்ரமம் ‘ பற்றி தொடர் எழுத ஆசாரகீணணால் ஏழு அல்லது ஏழேழு ஜென்மங்கள் அல்லது எட்டெட்டு சென்மங்கள் அவதாரம் எடுக்கமுடிந்தாலும் எல்லா வாசகர்களும் அவ்வளவு ஜென்மங்களெடுத்து கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைக்குமா..அதிலும் மறு ஜென்மத்தில் நம்பிக்கையில்லா மற்ற மத வாசகர்கள் என்ன செய்வார்களோ என்று தெரியவில்லை என்பதால் அந்த தலைப்புக்கள் பற்றி ஆசாரகீணன் அமைதியாக யோசிக்கட்டும்.

பலகோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சனாதன மதம் சமாதானம் மற்றும் அஹிம்சை பற்றி போதித்து வந்திருக்கும் மதம் என்பதற்கான ஆதாரங்களையெல்லாம் பா.ஜ.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட ‘திருத்தப்பட்ட வரலாறு ‘ புத்தகங்களிலிருந்து ஆசாரகீணன் எடுத்துக்கொள்ளலாம்.

அந்த சகிப்பு தன்மையின் காரணமாகத்தான் மற்ற மதங்களெல்லாம் இந்திய மண்ணிலே வளர்ந்ததாக கூட கூறி மழுப்பலாம் (ஆனால் தன் மதத்தில் இருக்கும் மக்களில் ஒரு பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக்கி நசுக்கி வைத்துக்கொண்டிருப்பது பற்றி மூச்சு விடக்கூடாது)

அடுத்த Hot Topic க்கான ‘யாகங்களின் வகைகளும் பலன்களும் ‘ என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் அமையவேண்டும்..அதில் நவீன அரசியல் வாதிகள் நடத்தும் ‘வோட்டு ‘ யாகம், எதிர் கட்சிக்காரர்களுக்கு வைக்கும் ‘வேட்டு ‘ யாகம், ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க நடத்தும் யாகம், பற்றி குறிப்பு தந்தால் நன்றாக இருக்கும்..

ஆசாரகீனனின் எதிர்கால ‘முடிவிலா தொடருக்கு ‘ போட்டியாக இது அமையக்கூடாது என்பதற்காக இங்கேயே முற்றுப்புள்ளி வைக்கிறேன்

சரி கட்டுரைக்கு வருவோம் (நேரமின்மையால் தெளஹீது மட்டும் பற்றி சிறு விளக்கம்)

கட்டுரையில் Michael Scott Doran-ன் தெளஹீது என்பதன் விளக்கம் தெளஹீது பற்றிய அவரின் அரைகுறை புரிதலையே காட்டுகிறது.

தெளஹீது என்றால் ஏகத்துவம், ஒருமைப்படுத்துதல் என்று அர்த்தம்..இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஒவ்வொரு முஸ்லிமும் கடைபிடிக்கவேண்டிய அடைப்படை கொள்கை. இந்தியாவின் குக்கிராமத்தில் இருக்கும் ஏழை முஸ்லிமிலிருந்து..சவுதி அரேபியாவில் இருக்கும் ‘பனக்கார ‘ ஷேக் வரை கட்டாயம் பின்பற்ற வேண்டியதுதான் ‘ஏகத்துவம் ‘.

ஆளுக்கொரு கொள்கையும், நேரத்துக்கொரு கோட்பாடும் கொண்டு அவரவர் இஷ்டத்துக்கு ‘அடிப்படை கொள்கையில் ‘ கஷ்டமான எதை வேண்டுமானாலும் விட்டுத்தள்ளவோ, தங்களுக்கு வேண்டியதை இட்டுக்கட்டி சேர்த்துக்கொள்ளவோ இஸ்லாத்தில் வழியில்லை.

வழிபடுதலில் இறைவனுக்கு இணைவைத்தல், இறைவனின் படைப்புக்களான கல், மரம் மற்றும் மாடு போன்றவைகளையோ அல்லது இறைவனால் படைக்கப்பட்ட மனிதனை மற்ற மனிதர்கள் தெய்வமாக உயிரோடு இருக்கும்போதோ அல்லது அவர் இறந்தபிறகு அவரின் சமாதியை வழிபாடு செய்வது..படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்து செயல்களையும் ஒரே இறைவன் தான் செய்கிறான் என்று நம்பிக்கை வைப்பது..

உள்ளத்தாலும் உடலாலும் செய்யும் வணக்கமும், மற்றும் நேர்ச்சையும் இறைவனுக்கு மட்டும்தான்..

அடி பணிவது, தலை வணங்குவது, நன்மை மற்றும் உதவி தேடுவது எல்லாம் இறைவனிடம் மட்டும்தான்.

இறைவன் பெயரில் மட்டும்தான் சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட்டது.

மந்திரித்தல், திருஷ்டி கழித்தல்..தாயத்து தொங்கவிடுவது போன்ற இறைவனின் சக்திக்கு இணை கற்பிக்கும் மூடச்செயல்கள் தவிர்க்கப்படவேண்டும்

இறைவனைத்தவிர அவனின் படைப்புக்களான எந்த சக்தியுமில்லா மனிதர்கள், கல், மரம் போன்றவற்றிலிருந்து அருளையோ, ஆகாரத்தையோ, செல்வத்தையோ, பாதுகாப்பையோ எதிர்பார்ப்பதும், வேண்டுவதும் கூடாது.

இறையடியார்களை கண்ணியப்படுத்துவதிலும் நல்லவர்களை மதிப்பதிலும் வரம்பு மீறக்கூடாது..காலில் விழுவது, ஆசிர்வாதம் பெறுதல் அவர்களை தெய்வத்துக்கு ஒப்பிடுதல் போன்றவைகளை தவிர்த்தல். அதைவிட அவர்கள் காட்டிய நல்வழியில் நடப்பதும், அவ்வழிக்கு மற்றவர்களை அழைப்பதும்தான் அவர்களை கன்ணியப்படுத்துவதற்கு அடையாளம்..

சகுனம் பார்ப்பது, ஜோசியம், சாஸ்திரம், துர்ச்சகுனம் பார்ப்பது, நேரம் சரியில்லை என்று காலத்தை குரை கூறுவது தெளஹீதிற்கு முரனானது.

பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்யும் ‘முகஸ்துதி ‘ மற்றும் ‘துதி ‘ கூட தவ்ஹீதின் படி தவறுதான். பொய்யை மெய்யாக்குவது, இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி முனைப்பதுவும் தவ்ஹீதின் படி தவறுதான்.

தலைவர்களும் தலைவிகளும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக ‘கை சுண்டு விரல் ‘ ‘கால் கட்டை விரல் ‘ போன்றவைகளை அறுத்து ‘இரத்த அபிஷேகம் ‘ செய்வதும் தெளஹீதிற்கு முரனானது.

தெளஹீது என்றால் என்பதற்கு மேற்கண்ட விளக்கமும் செயல்முரயும் இருப்பதை ‘கவனமாக ‘ மறந்துவிட்டு ஏதேதோ எழுதுவதை, மொழிபெயர்ப்பதை எதிர்காலத்தில் தவிர்க்கவும்.

உண்மையுள்ள

ஷேக் அஹமது யாசீன்

say_tn@hotmail.com

Series Navigation

ஷேக் அஹமது யாசீன்

ஷேக் அஹமது யாசீன்