முதலாம் தீர்மான கோட்பாடு

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


சக்கரவர்த்தி மகா அக்பர் வாழ்க வாழ்க என்ற கோரஷான குரலொலியால் மந்திர ஆலோசனை மண்டபமே அதிர்ந்தது. ராஜாங்க பிரதிநிதிகள் எழுந்து நிற்க மகா அக்பர் நடந்து வந்து கொண்டிருக்க பூக்களால் தூவி வரவேற்றனர் இளம் பெண்கள்.பளிங்கு கற்களின் பூவேலைப்பாடுகள் மிக்க மண்டபம் களேபாரத்தால் பொலிவுமிக்கதாக மாறிக்கொண்டிருந்தது.சிம்மாசனத்தில் வந்து உட்கார்ந்த சக்கரவர்த்தியை சாமரம் வீசி பணிப்பெண்கள் அயர்வை களைய முயன்றனர்.நீண்ட வாழ்த்தொலிகளுக்கு பின் மண்டபம் அமைதியானது.முதல் மந்திரி இருக்கையிலிருந்து எழும்பி சக்கரவர்த்தி அவர்களே இன்றைய தினம் இந்த மண்டபத்தில் நாம் எல்லோரும் கலந்து கொண்ட முக்கிய நோக்கமே சலீமை மீட்க வேண்டும் என்பது தான்…என்று பேச்சை துவங்கினார்.சலீமை காணவில்லை என்று அப்போது தான் பெரும்பாலனவர்க்கும் தெரிய வந்தது. சலீமுக்கு என்ன நேர்ந்தது என்பதையறிய ஆவலாயிருந்த கண்களை நோக்கி மந்திரி பேச துவங்கினார்.நேற்றிரவு அந்தபுர கதவை தாழிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த சலீமை காணவில்லை.சலீமுக்கு என்னவாகியது என்று தெரியாது.இக்கணம் வரை அவர் தேடப்பட்டுக்கொண்டிருக்கிறார்.மந்திரலோசனை மண்டபத்தில் பெரிய விவாதம் ஆரம்பமாகியது.சலீம் எங்கே போனார் என்று, அவர் காணாமல் போக என்ன காரணம் என்றும், அவரை யாராவது கடத்திக்கொண்டு போயிருப்பார்களோ என்ற சந்தேகமும்,அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமா என்றும்,அந்தபுரத்தில் நுழைந்தவர் எப்படி காணாமல் போயிருப்பார் என்றும்,இப்படியொரு சம்பவம் நடைபெற வேண்டுமானால் அரண்மனையில் உள்ளவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றும் பல்வேறு கோணங்களில் அலசி ஆராயப்பட்டது.

அவர்கள் சில தீர்மானங்களுக்கு வருவதற்கு முன்பு தீர்மானங்களைப் பற்றி அலச வேண்டுவது அவசியமாகும். சில நிச்சயமற்றவைகளில் இருந்து ஆலோசனையும் அதிலிருந்து தீர்மானங்களும் உருவாவதால் குழப்பங்களே மிஞ்சுகிறது. சலீமை காணவில்லை என்ற அறிவின் அடிப்படையிலான தீர்மானங்கள் உருவாவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அரசு அதிகாரிகளை பொறுத்தவரையில் எதிகாலத்தை பற்றி கவலை கொள்ளாமல் விளைவுகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றனர்.என்வே தீர்மானங்கள் பற்றிய விதிகளையும் கோட்பாடுகளையும் விரிவாக நோக்கவேண்டியிருக்கிறது.தீர்மானக்கோட்பாடை பொறுத்தவரையில் பொதுவாக மூன்று முக்கிய நிலைகள் காணப்படுகிறது.சலீமை காணவில்லை என்ற அச்சத்தின் காரணமாக நிகழும் ஆலோசனையில் இருந்து தீர்மானகோட்பாடு உருவாவது குறித்து பார்க்கவேண்டும். முதல் நிலையென்பது தீர்மானிப்பவர் தீர்மானத்துக்கு வருவதற்க்கான மாற்று வழிகளையும் கணக்கிலெடுக்கிறார். சலீமின் விஷயத்தைப்பொறுத்தவரை மூன்று உபகாரணிகளையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

1) சலீமை கண்டுபிடிக்காவிட்டால்

2) சலீமுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால்

3) சலீமுக்கு வேறு பிரச்சனைகள் நிகழ்ந்தால்

காரணிகளை கண்டறிந்து கொள்ளும் போது மாற்றுவழிகளினூடே தீர்மானிப்பவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவார். பொதுவாக தீர்மானிப்பவர் எதிகாலத்தை கருத்தில் கொண்டு எது நிகழும் என்ன பாதிப்புகள் வரும் என்று செயல்படுவதினால் எதிர்கால நிகழ்வுகள் தீர்மானகோட்பாட்டு விதிகளில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இவ் எதிர்கால நிகழ்வுகளை பட்டியலிடும் போது..

1) உயர்ந்த தேவை

2) மிதமான தேவை

3) குறைந்த தேவை

4) தோல்வி

ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. இயல்பு நிலைகளை விளக்கும் போது தீர்மானிப்பவர் இந்த நான்கு விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் இருக்கமுடியாது.அடுத்தபடியாக தீர்மானிப்பவர் ஒரு பட்டியல் மூலம் நிலமைகளை அவதானிப்பார்.எனவே தீர்மானிப்பவர் மூன்று சூழ்நிலைகளை பார்க்கிறார்.

தீர்மானிப்பவரின்

மாற்று விதிகள் இயல்பு நிலை தேவைகள்

மிகவும் மிதமான குறைந்த தோல்வி

தேடுதல் xx x x x

கண்டடைதல் x xxx x xx

இல்லாவிடில் x xx xx xxx

1) தீர்மானித்தலின் விதி சில நிச்சயங்களில் இருக்கிறது.

2) தீர்மானித்தலின் விதி சில நிச்சயமற்றவைகளில் இருக்கிறது

3) தீர்மானித்தலின் விதி சில இடர்பாடுகளை கொண்டது

இதில் நிச்சயங்களில் இருந்து உருவாகும் முடிவுகள் முக்கியமாக கருதப்படுகிறது.

நிச்சயமற்றவைகளில் இருந்து உருவாகும் தீர்மானங்களின் விதியை பொறுத்தவரையில் தீர்மானிப்பவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றாலும் நிகழ்லாம் என்ற கருதுகோளை முற்ரிலும் அலச்சியம் செய்வது இல்லை.அந்த விஷயத்தை பட்டியலிடும் போது..

தீர்மானிப்பவரின்

மாற்றுவிதிகள் இயல்பு நிலை தேவைகள்

மிகவும் மிதமான குறைந்த தோல்வி

தேடுதல் xx x x x

கண்டடைதல் x xxx x xx

இல்லாவிடில் x xx x xxx

மிகவும் முக்கிய நிலை என்பது தீர்மானித்தல் விதியில் நிச்சயமற்றவைகளின்

பார்வையில் நன்னம்பிக்கை விதியாக இருக்கிறது.அதுபோல குறைந்த நிலை என்பது எதிமறையான தீர்மானத்துக்கு வழிவகுக்கிறது.

தீர்மானிப்பவரின்

மாற்றுவிதிகள் இயல்பு நிலை தேவைகள்

மிகவும் மிதமான குறைந்த தோல்வி

தேடுதல் xx x x x

கண்டடைதல் x xxx x xx

இல்லாவிடில் x xx x xxx

இந்தபட்டியலை பார்க்கும் போது மாற்றுவிதிகளின் தேவைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.எதார்த்தை ஒரு எடுகோளாக கொண்டு தீர்மானித்தலின் விதியை நிச்சயமற்றவைகளில் இருந்து மிகவும் அல்லது குறைந்த என்ற நிலைபாடுகளுக்கு வரமுடியும்

தீர்மானிப்பவரின்

மாற்றுவிதிகள் இயல்பு நிலை தேவைகள்

மிகவும் மிதமான குறைந்த தோல்வி

தேடுதல் xx x x x

கண்டடைதல் y y x xx

இல்லாவிடில் x xx y y

எதார்தத்தின் அளவுகள் = மிகவும் & + (1 – &) குறைவாக என்ற நிலையில் செயல்படும் விதியை பொறுத்தவரை

சலீமை கண்டு பிடிக்காவிடில் .7(x) + .3(xx) = xx

சலீமுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் .7(x) + .3(y) = xy

சலீமுக்கு வேறு பிரச்சனை நிகழ்ந்தால் .7(xx) + .3(xxx) = x

எனவே எதார்த்தத்தின் அடிப்படையில் நன்னம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை ஆகிய இரண்டும் தீர்மானித்தல் விதியில் உள்ளதாகிறது.தீர்மானித்தலை உருவாக்குவதில் இடற்பாடுகள் முக்கிய விதியாக இருக்கும் பட்சத்தில் நிகழலாம் என்ற நிலை இயல்பாக உருவாகிவிடுகிறது.இந்த விஷயம் சில கடந்த கால ஆவணங்களை அல்லது அகவயமான தரவுகளை கொண்டு தீர்மானிப்பவர் சூழ்நிலையடிப்படை யில் விதியை உருவாக்குவார்.தீர்மானித்தலின் விதியில் மூன்று அடிப்படை காரணிகளை பார்க்கவேண்டியிருக்கிறது.

1) எதிர்பார்க்கும் விளைவு

2) பகுத்தறியும் நிலைபாடு

3) அதிகப்படியான வாய்ப்பு

கண்டுபிடித்தல் எனும் தீர்மானவிதியில் உள்ள சரத்துகளை பார்க்கும் போது சில பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளமுடியும்.கடந்த ஒரு ஆண்டு கால கண்டுபிடித்தல் பற்றிய தரவுகளை பார்க்கும் போது..

ஒரு ஆண்டில் நிகழ்ந்த புகார்கள்

கண்டுபிடிக்கப்பட்டது பதிவுசெய்யப்பட்டது வாய்ப்புகள்

10 35 5

17 25 5

8 10 0

4 10 0

இந்த அட்டவணை மிகவும் பயனுள்ளதாகும்.தீர்மானிப்பவரின் பார்வையில் இந்த அட்டவணைக் கொண்டுவரப்படுவதால் நாட்டு நிலமை மிக துல்லியமாக அறியப்படுகிறது.இதனால் தீர்மானித்தலின் விதியை அடிப்படைக்காரணிகளில் இருந்து உருவாக்கப்பட வேண்டிய வாய்ப்புகள் உருவாகிறது.

விதிமுறைக்கு உட்பட்ட பயன்பாடுகள்

தேவையின் வாய்ப்புகள் வாய்ப்புநிலை

10 17 8 4

10 xxx xx y x

17 xx x xx y

8 xxx y x xxx

4 xxx x x xx

இந்த அட்டவணை விதிமுறைக்கு உட்பட்ட பயன்பாடுகளை பேசுகிறது.கடந்தகால பதிவுகளின் அடிப்படையில் வைத் பயன்பாடுகளை பார்கிறபோது 35க்கு 10 என்பதும் 25க்கு 17 என்பதும் 10க்கு 8 என்பதும் 10க்கு 4 என்பதும் முக்கிய பயன்பாடுகளே. மேலும் 5,5 என்ற வாய்ப்புகள் பயன்பாட்டில் சேர்கிறபோது கிட்டதட்ட 60%அல்லது 70% என்ற சதவீத அடிப்படையில் கண்டுபிடித்தல் நிகழ்ந்திருக்கிறது.மேலும் மேற்கண்ட அட்டவணையின் வ  1ய்ப்பு நிலையை பரிசீலனைக்கு உட்படுத்தியதில் 50:50 முக்கிய விதியாக இருக்கிறது.எனவே xxx என்ற அதிக வாய்ப்பும் xx என்ற இரண்டாம் வாய்ப்பும் x என்ற குறைந்த வாய்ப்பும் y என்ற தோல்வியும் முறையே 50:50 என்ற அடிப்படையில் நிகழ்ந்துள்ளது.

பல்வேறுபட்ட தரவுகளின் அடிப்படையில் தீர்மானித்தலின் விதியை அணுக வேண்டியிருப்பதால் எதிபார்க்கும் விளைவு முக்கியமானதாகிறது.p என்பது எதிர்பார்க்கும் விளைவாகும்.ML என்பது வாய்ப்பையும் MP என்பது தோல்வியையும் MS என்பது எதிர்விளைவையும் குறிக்கும்.

P = ML

MP + MS

= XXX

X + Y

= XXX

XY

= XX

பாயிண்ட் Q என்பது அலகாகும்.இந்த படத்தை பார்கிறபோது எதிர்பார்க்கும் விளைவு முந்தைய கண்டுபிடித்தலின் தரவுகளை அடிப்படையாக கொண்டது.முந்தைய தரவுகளை வைத்து பார்க்கும் போது எதிர்பார்க்கும் விளைவு 50% நிகழ வாய்ப்பு உள்ளது.

P(MP) = (1-P)(ML)

P(MP) = (M1-P)(MP)

P(MP) + P(ML) = ML

அல்லது

P(MP) + P(ML) = ML

P = ML

MP+ML

மேற்சொன்ன வித்யில் தீர்மானித்தலின் விதி அதிகபடியான பயன்பாடுமிக்கதாக இருக்கிறது என்று புலனாகிறது.

பொதுவான வாய்ப்புகள்

பதிவுகள் நிகழ்ந்தவை வாய்ப்புகள்

10 5 +5

17 5 +5

8 0 +5

4 0 +4

பொதவான வாய்ப்புகளை வைத்து பார்க்கும் போது கண்டுபிடிக்க வாய்ப்புகள் 70% இருப்பதாக நம்பலாம். எனவே சலீமை கண்டுபிடித்துவிடலாம். சலீமை தேடுவதை முழுவீச்சுடன் தொடரவேண்டும் என்று மகா அக்பரின் தலைமையிலான ஆலோசனை குழு முடிவெடுத்தது.தீர்மானித்தலின் விதி என்பது சாதாரண விஷயம் அல்ல என்பது ஒருவேளை அக்பருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.ஆனால் முக்கிய மந்திரியை பெ 0ாறுத்தவரையில் தீர்மானித்தலின் விதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவராகவே இருக்கிறார்.மேற்சொன்ன விதிகளை மகாஅக்பரின் பார்வைக்கு முன்வைக்கப்பட்ட

போது அக்பரின் யூகம் பற்றிய விதிமுறையை அவைக்கு வைத்தார்.தீர்மானித்தல் விதி எவ்வள்வு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கிததோ அந்தாள்வுக்கு யூகம் பற்றிய விதியும் முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதை அக்பர் விளக்கலானார்.இந்தவிதிக்கு தீர்மானித்தலின் விதியில் உள்ள பொதுவான வாய்ப்புகளே பிராதானமானது என்றும்

அதனால் தான் யூகம் பற்றிய விதியை த்ம்மால் சரியாக உருவாக்கமுடிந்த்து என்று

விளக்கலானார்.

கடந்தவருடம் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் கண்டுபிடிக்கப்பட்டதும்,கண்டு பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டவையும்

மாதங்கள் பதிவுகள் கண்டுபிடிக்கப்ட்டது வாய்ப்புகள்

முகரம் 4 2 1

சபர் 3 1 1

ரபியுல் அவ்வல் 6 1 1

ரபியுல் ஆகிர் 4 2 1

ஜமாதிலவ்வல் 5 2 2

ஜமாதிலாகிர் 8 5 2

ரஜப் 4 1 2

ஷாபான் 2 1 2

y = a + bx

y = a + b1x1 + b2x2

y = எதிர்பார்க்கும் வாய்ப்பு

a = கண்டுபிடிக்கப்பட்டது

b = வாய்ப்புகள்

x = பதிவுகள்

எனவே ஜந்து புகார்களுக்கு 3.35 புகார்கள் பதில் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதால் கண்டுபிடித்தல் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று யூகம் பற்றிய விதியை சொல்லிமுடித்ததும் சக்கரவ்ர்த்தி வாழ்க வாழ்க என்று எல்லோரும் கோரஷாக கோஷமிட மகா அக்பர் மிடுக்குடன் எழுந்து அரண்மனை நோக்கி நடக்கலானார்.

எச்.முஜீப் ரஹ்மான்

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்