மீட்டாத வீணை

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

வேதா


அலைகடலிலா ? ஆற்று மணலிலா ?
அந்தி வானத்திலா ? உன் அக்னிப் பார்வையிலா ?
ஒற்றை வார்த்தையிலா ? உயிரின் தீண்டலிலா ?
உள்ளக் காதலிலா ? உரிமைத் தேடலிலா ?
முத்தச் சுவையிலா ? உன் முல்லைச் சிரிப்பிலா ?
மணக்கும் தமிழிலா ? நீ மறைத்த ஏக்கத்திலா ?
தேன் கூட்டிலா ? தேடிய மழையிலா ?
குட்டிக் குன்றிலா ? குழைத்த சிற்பத்திலா ?
கோபக் கனலிலா ? கூட்டிய கவிதையிலா ?
மலர்ந்த பூவிலா ? நீ மலர்த்தாத இதழிலா ?
மீட்டிய வீணையிலா ? மீட்டாத தந்தியிலா ?
தொலைத்த தூரத்திலா ? ‘நான் ‘ தொலைந்த நேரத்திலா ?

எங்கு வைத்தேன் நினைவில்லை – இனி
எடுத்துச் செல்ல ஏதுமில்லை!
இங்கு எல்லாமாய் நின்று – என்
எல்லாமும் ஆகின்றாய்! – என்னை
என்னவெல்லாம் செய்கின்றாய்!

எங்கிருந்து வந்திருப்பாய் ?
எப்படி நுழைந்திருப்பாய் ?
எந்த வழி வந்தாலும் – என்
எண்ணச் சிறகுகளால்
ஏங்கித் தவம் புரிந்து – உனக்கு
எல்லாமாய் நான் இருப்பேன் – இனி
என்றென்றும் துணை இருப்பேன்!

piraati@hotmail.com

Series Navigation