மிச்சங்கள்
ஷம்மி முத்துவேல்

உடைந்த கண்ணாடி
காட்டுகிறது…..
இரு வேறு பாவனை
நீளமும் வட்டமுமாய்
கோணல் மாணலாக….
சுவருக்கு சிக்காத சித்திரம் ….
அகமும் புறமும் அருகருகே
அறிமுகம் அற்றதாய் ……
முகமறியா விருந்தினர் போல …..
கிழிந்த காகிதமாய் காற்றினில்
பறக்க எத்தனித்தது …..
கழிந்தது
நேற்றைய பொழுதின் இன்றைய
மிச்சங்கள் ……
ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்