மிகவும் அழகானவள் ….!

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

கலாசுரன்


——————————————————
வாழ்க்கையின் நிறைவு …
துன்பங்களின் முடிவு….
நிதர்சனமல்லாத எதோ ஒன்றின் தொடக்கம்
அல்லது
உயிரின் உருமாற்றமோ பரிமாற்றமோ என
வைத்துக்கொள்வோம் ….

இல்லை….. இவை அனைத்தும்
பொய்யாகக்கூட இருக்கலாம்….!

அல்லோலப்படும் இவ்வழ்க்கையின்
ஏதோ ஒரு முனையில்
இருந்து பார்க்கையில்

மரணம் மிகவும் அழகானவள்….!!!
—————————————————————-

Series Navigation