எச்.முஜீப் ரஹ்மான்
நவீன கலை உத்திகளான சர்ரியலிசம்,கூபிசம் போல பின்நவீனத்தில் சில கலை உத்திகள் இருக்கிறது. சில பதிற்றாண்டுகளாக கலையுலகில் பல கருத்தாடல்கள் பாதிப்பு செலுத்துவது நடைப்பெற்று வருகிறது.வரலாறு புதிய பார்வைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.கலையனுபவங்கள் பல நூற்றாண்டு முழுவதும் செல்வாக்கு செலுத்துகின்றன.எனவே புதியவை பற்றியவை குறித்து தொடர்ந்து பேசப்படமுடிகிறது.கலையின் அடுத்த இயக்கம் என்னவாக இருக்கும் என்று தொடர்ந்து சிந்திக்கப்படுகிறது.கலைஞர்களைப் பொறுத்தவரை எதுவும் தேவையற்று போய்விடுவதில்லை.புதியன செய்யவேண்டும் என்கிற உத்வேகமே பல பரிசோதனைகளுக்கும் காரணமாகிறது.நவீன கலை இயக்கம் 1870ல் இருந்தே பலவிதமான பரிசோதனைகளை செய்துகொண்டிருக்கிறது.
தொடர்ச்சியான செயல்பாடுகளினிமித்தம் பார்வைகளும்,வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் குறிப்பிடும்படியான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.மஸ்ஸரியலிசம் எனும் கருத்தாக்கம் ஸர்ரியலிசத்தின் பாதையில் தொழிற்பட்டு படிமயாக்கம் மற்றும் மக்கள்திரள் ஊடகங்கள் வழியாக சாத்தியமாகியுள்ளது.ஒரு தர்க்கம் வரலாற்று தர்க்கமாக மாறுவதை தான் மஸ்ஸர்ரியலிசம் வலியுறுத்துகிறது.
கலைவரலாற்றில் தர்க்கத்தை பார்கும் போது நவீன கலை மூன்றுமுக்கிய மரபுகளிலிருந்து பல மாதிரிகளையும் காட்சியாக்க படைப்பற்றலையும் பெற்றிருக்கிறது.எக்ஸ்பிரசனிசம்,அப்ஸ்டிராக்சன்,சர்ரியலிசம் எனும் முறையியல் மூலம் நவீன கலை செல்வாக்கு செலுத்தியது. இம்மூன்று உத்திகளும் வித்தியாசமான பார்வைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் கலை,இலக்கியத்தின் அழகியல் பார்வைகள் குறிப்பிடும் படியான மாற்றம்
பெற்றது.எக்ஸ்பிரசனிசத்தை பொறுத்தவரை உணர்வுகளின் வெளிப்படுகளை
கொண்டிருந்த போதிலும் எதார்த்தம் பற்றிய புதிய புரிதல் உருவாக நேர்ந்தது.
சாராம்சவாதத்தைப் பொறுத்தவரையில் எதார்த்தத்துக்கு அப்பாலுள்ள தோற்றங்களும்,பார்வைகளும் இயல்பை மாற்றியமைத்தது.சர்ரியலிசம் வேறு விததில் நனவிலி மன நிலையை துல்லியமாக வெளிப்படுத்தியது.கனவுகள்,தனியங்கி உணர்வுகள்,ஆழ்ந்த சிந்தனைகள் மனத்தை விழிப்படையவைத்து கொண்டு வெளியாயின.சர்ரியலிசத்தின் பாதிப்புகள் தான் நவீன கலை,இலக்கியத்தின் ஆகமொத்தமான வித்தியாசகுணம்
என்ற வகையில் மிகப்பெரும் அதிர்சிகளை அளித்தது. கொதிக்கும் மனநிலைக்கும்,எதார்த்தத்துக்கும் ஆன உறவிலிருந்து கனவுகள் வெளிப்பட்டதால் அவ்வனுபவம் மிகையதார்தம் என்றழைக்கப்பட்டது.இம்மூன்று உத்திகளை பொறுத்தவரை புறபதிவுவாதம் உளவியலாகவும்,சாராம்சவாதம் கட்டுக்கடங்காத
நிலையையும்,மிகையதார்த்தம் உருமாற்றம் செய்வதாகவும் அமைந்தது.
மூன்று மாதிரிகளும் தன்னளவில் பாதிப்பு செலுத்துவதாக அமைந்த போதிலும்
சர்ரியலிசம் ஒரு படி மேலாக தொடர்ந்து நடைபயின்று கொண்டிருந்தது.பின்நவீன யுகத்திலும் அதன் பாதிப்புகள் இருந்துக்கொண்டிருக்கிறது.சர்ரியலிச உருமாற்ற அணுகு
முறையை ஏற்றுக்கொண்டு சாதாரண அனுபவத்தை உணர்வுபூர்வமானதாக மாற்றும்
பார்வைகளை பின்நவீன படைப்புகள் பிரதானமாக கொண்டிருக்கின்றன.சர்ரியலிசத்தை
உள்வாங்கிக்கொண்டே படைப்புலகம் விரைவில் மஸ்ஸர்ரியலிசம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.ஆரம்ப நிலையில் இது காட்சி கலைஞர்களை மாத்திரம்
சென்றடைந்தது.அவர்கள் ஊடகங்களில் படிவுருவியலுக்கு இதை தொழில்நுட்பங்களுடன் முயன்று பார்த்தனர்.மஸ்ஸர்ரியலிசம் ஒரு கலை இயக்கமாக இன்று மேற்குலகில் அதிகம் செல்வாக்கை செலுத்துகிறது.மரபார்ந்த கலையனுபவங்களில்
இருந்து மிகையதார்த்த பண்புடன் ஊடக காட்சிகளில் தர்க்கங்களுக்குட்பட்டு சித்திரபடுத்தியதால் அசாதரண தோற்றம் பெற்றுவிடுகிறது.நவீன கலையை தகவல்
தொழில்நுட்பத்துடன் இணைத்திருப்பதால் வடிவிலும் உள்ளடக்கத்திலும் புதுமைமிக்கதாக ஆகிவிடுகிறது. புகைப்ப்டக்கலையையும்,வரைகலையையும்,புதிய
தொழிநுட்பத்தில் கொலாஜ் பாணியில் எதார்த்ததை வேறு மாதிரிகளில் செய்து காட்டினார்கள்.இத்தன்மை மஸ்ஸர்ரியலிசத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேக்லுஹான்,ஈட்வார்டு மைபிரிட்ஜ் போன்றோர்கள் குறிப்பிடும் படியான கலைப்படைப்புகளை உருவாகினர்.சர்ரியலிசத்துக்கும்,நவீன ஊடகத்துக்குமான
உறவாக இவை இருந்தபோதிலும் பொது உளவியலில் அகத்துக்கும்,புறத்துக்குமான புது வடிவம் உருவாக நேர்ந்தது.மார்ஸல் மேலுஹான் உருவாகிய இந்த புது மனோபாவம் ஆல் அட் ஒன்ஸ் என்றழைக்கப்பட்டது. மஸ்ஸர்ரியலிசம் ஒரு இயக்கமாக
உருவாகிய போது ஜேம்ஸ் சீகாபர்,கின்னி கார்டினர்,செசில் டச்சன்,மோரிஸ் போன்றோர்கள் அதை முன்னெடுத்து சென்றனர்.ஜேம்ஸ் சீகாபர் மஸ்ஸர்ரியலிசம் என்றால் என்ன என்று சொல்லும் போது பலவடிவங்களில் வெளிப்படும் படைப்பனுபவம் சர்ரியலிச நோக்கில் விர்ச்சுவல் எதார்த்தமாக மாறுவதை இப்படி அழைக்கலாம் என்றார்.ஆனால் அலக்ஸ் பிலிப்ஸ்சன்கோ எனும் ரஷ்ய கலைஞர் இவ்வகை படைப்புகளை மெட்டாரியலிசம் என்றழைத்தார்.மெட்டாரியலிச வகையில் மஸ்ஸர்ரியலிசத்தை அடக்கினாலும் அது வேறுபடுமிடம் இருக்கதான் செய்கிறது.இவ்வைப்பட்ட கலைப்படைப்புகளை பார்கும் போது
ஸ்till alive 1994
March 1994
The Three Graces 1993
January 1993
Silence 1997
The Hermitage 1997
The Council of the Kirovsky District 1999
Winter Dreams 1999
After a Thunder-storm 2000
போன்றவை குறிப்பிடதக்கனவாம். Michael Morris ன் A More Realistic Way Of Seeing The World
எனும் கட்டுரை மஸ்ஸர்ரியலிசம் என்பது எதார்த்தையும் கற்பனையையும் நனவிலிருந்து
நனவுலியாக மாற்றும் உத்தி என்று சொன்னார்.மேலும் மாஸ் எனும் மக்கள் வாழும் புற உலகையும் சர்ரியல் எனும் அக உலகையும் சித்தரிப்பது என்ற விளக்கமும் இருக்கிறது.
மஸ்ஸர்ரியலிசம் தான் கடைசி எதார்த்தம் the ultimate realism என்று சொல்லப்படுகிறது.பொது ஜனபண்பாட்டிலுள்ள குறிகளையும்,சித்திரங்களையும் காட்சிப்படுத்துவது இதிலுள்ளதாகும்.மக்கள்திரள் என்பதிலுள்ள டிவி,இணையம்,விளம்பரம் போன்றவை சொல்லும் கடிகாரம்,வாகனங்கள்,டிரயின்,ஜெட் விமானம் போன்றவையும்,பண்பாட்டிலுள்ள சோட கேன்,ஸும்மிங் பூல்,பீச் பால்ஸ் போன்றவற்றையும் அறிவியல், எனர்ஜி போன்றவற்றுடன் இணைப்பதும் இவ்வுத்தியில் காணப்படுகிறது. மஸ்ஸர்ரியலிசத்தில் தினவாழ்வை பார்க்கும் பார்வையும்,எதார்த்தத்தை
சர்ரியல் விசயங்களான கனவுகள்,நம்பிக்கை,பயம்,விருப்புகள், விளங்கமுடியா அடிமன புதிர்களுடன் இணைப்பது முக்கியமாகும். மஸ்ஸர்ரியலிசத்தை புரிந்து கொள்ள கீழ்கண்ட படைப்புகளை வாசிக்கலாம்.
The Inevitability of Massurrealism —Mark Daniel Cohen
Michael Morris:A More Realistic Way Of Seeing The World
Caplyn Dor :Massurrealism of the 21st Century
Alex Philipchenko: Essay On Massurrealism
The Image Of The City In Temporal Context
21ஆம் நூற்றாண்டின் மாபெரும் கலை,இலக்கிய இயக்கம் என்று சிறப்பிக்கபட்டுள்ள
மஸ்ஸரியலிசம் புகழ்மிக்க ஓவியர்களையும்,கவிஞர்களையும் மற்றும் பல படைப்பாளிகளையும் கவர்ந்து வளர்ந்து வருகிறது.பின்நவீன கலையாக்கங்களில் சிறப்பிடம் பெற்றுள்ள மஸ்ஸர்ரியலிசம் ரஷ்யாவில் மெட்டாரியலிசம் என்றழைக்கப்பட்டதாக முன்னமே பார்த்தோம்.படைப்பிலக்கியத்தில் இதன் தாக்கம் பெருமளவுக்கு இருக்கிறது.
Dmitry A. Prigov,
Lev Rubinshtein
Ivan Zhdanov,
Aleksei Parshchikov,
Aleksandr Eremenko
Dmitry Golynko-Volfson
Arkady Dragomoshchenko
Berkeley poet Lyn Hejinian
போன்றோர்கள் கவனம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.கவிதையில் the poetry of the present moment என்ற நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள்.சிலர் மெட்டாரியல் கவிதை
என்றும்,சிலர் மெட்டாமார்பிஸ் கவிதை என்றும் அழைக்கிறார்கள்.மஸ்ஸர்ரியலிசத்தில் சிம்பாலிசமும்,சர்ரியலிசமும் இணைந்து செயலாற்றுகிறது என்று விமர்சகர்கள் அவிப்பிராயப்படுகிறார்கள்.
—-
mujeebu2000@yahoo.co.in
- ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை
- இன்று சொல்லிச் சென்றது
- அணுவும் ஆன்மீகமும்
- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]
- கற்பு என்றால் என்ன ?
- கவிதையில் வடிகட்டிய உண்மை
- அந்த பொசங்களின் வாழ்வு….
- உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்
- விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.
- மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக
- சிவா ! ராமா ! – 2060
- சிரிப்பு
- கடிதம்
- K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை
- மலர்களும் முட்களும்
- ‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்
- திருவள்ளுவர் கல்வி நிலையம்
- கடிதம் – ஆங்கிலம்
- இனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி
- டொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு
- எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?
- சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)
- கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
- சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)
- மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!
- கறுப்புப் பூனை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7
- பாலம்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்
- மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )
- எடின்பரோ குறிப்புகள்-8
- மீள் வாசிப்பில் சூபிசம்
- உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை
- காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்
- இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1
- பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இளமையா முதுமையா
- எதுவுமில்லாத போது
- மீண்டும் மரணம் மீதான பயம்
- கவிதைகள்
- சிரிப்பு
- புனித உறவுகள்