மனித வேட்டை

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

கே.பாலமுருகன்சக மனிதர்களின்
உணர்வைப் பற்றி
அக்கறைகள் கொள்ளாத
மனித வேட்டை
நிகழ்ந்து கொண்டிருக்கிறது!

சிறுமைப்படுத்தி
அகம் தாழ்ந்து
கொள்வது எந்தக் கடவுளுக்கு
மனிதப் பலி
கொடுப்பதற்கு?

தன்மூப்புத்தனமும்
அதிகாரத்தனமும்
எழுந்து வந்து
முகங்களாக மாறி
சக மனிதனை ஏளனப்படுத்திச்
சிரித்துக் கொண்டிருப்பது
மனிதனேயமற்ற குகைக்குள்
தூசு மண்டிக் கொண்டிருப்பதற்கான
அறிகுறிகள்!

அவர்களால்
என்றளவும்
மரணச் சாலைகளில்
அவமானம் தாள முடியாமல்
எத்தனையோ
மனிதக் கூட்டங்கள்
மனிதர்களற்ற மோச்சத்தின்
வாசல் தேடிப்
பயணித்துக் கொண்டிருக்கின்றன!

உலக மனிதர்களுக்காக
அவர்கள் ஒரேயொரு
வேண்டுகோளைத்தான்
கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்!

சக மனிதனுக்கும்
உணர்வுகள் உண்டென்பதை
வாழ்ந்து முடிப்பதற்கு
முன்பாவது நினைவில் கொள்ளவும்!


bala_barathi@hotmail.com

Series Navigation