This entry is in the series 20031030_Issue

நெப்போலியன் சிங்கப்பூர்


எங்கள்
மூளைகளுள்
கந்தகச் சலவை.

கண்களில்
வளர்க்கப்படும்
கருப்புத் தீ.

காதுகள்
கட்டளைகளுக்கு
மட்டுமே
திறப்பவை.

வாய்
வார்த்தைகளுக்காய்
பேசாது.

கை
கால்
உடம்பு
கருவிகளாய்
இயக்கம்.

பொத்தானை
அழுத்தி
வெடிக்கும்
அந்தக் கடைசி
நிமிடங்களில்
எங்களுக்குள்ளும்
ஒரு நிலா
ஒரு கவிதை
ஒரு வெண்புறா
தோன்றிச் சிதறும்……
——
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation