மண்ணில் தான்
இளந்திரையன் –

நீல வானமும்
நிமிர்ந்த மரங்களும்
சல சலக்கும் ஆறுகளும்
சஞ்சரிக்கும் பறவைகளும்
சங்கீதமாய்தான் இருக்கின்றது
சந்தோசமாய்த் தான் இருக்கின்றது
ஆனாலும்,
பசிக்கு அழும் குழந்தையும்
பாலின்றி தவிக்கும் தாயும்
ஒரு வேளை சோற்றுக்கு
ஊரூராய் அலையும் உறவுகளும்
கந்தகம் மணக்கும் காற்றும்
கவிதையாய் இனிக்கவில்லை
உலகத்தின் விளிம்பை
கரங்கள் தொட நினைத்தாலும்
உறுதியாய் கால்கள்
பதிந்திருப்பது மண்ணில் தான்
Ssathya06@aol.com