மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

கா.முத்துகிருஷ்ணன்


வணக்கம்

விநாயகர் சிலைகளை கடலில் போட்டு கரைக்கும் பொழுது கவலைப்படும் மங்களத்தின் நெஞ்சம் அதே விநாயகரை களிமண் சிலை வடிவத்தில் கரைக்கும் பொழுது கலங்கவில்லையா?

விநாயகர் ஊர்வலத்தில் இளவட்டங்கள் குடித்துவிட்டு விசிலடித்து கும்மாளமடிக்கிறார்கள் எனும் கவலை வேறு.

பிள்ளையார் சிலையை உடைத்தவர்களுடைய ஆதரவாளர்களின் வாரிசுகள் இன்று பிள்ளையார் சிலையை வழிபடுகிறார்கள்.

எல்லா திருவிழாக்களிலும் இப்படி நடக்கத்தான் செய்கிறது.

மங்களத்தின் கவலைகளைக் கூட்ட இதோ கூடுதல் செய்திகள்.

மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் அனைத்து கட்சியினரும் பாரபட்சமில்லாமல் கட்சிக்கொரு Light Music நடத்தும் இழவு மற்றும் ஆபாசக் கூத்து.

இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் இடம் பெற்ற பிள்ளையார் படம் நம் நாட்டின் ரூபாயில் வெளிவருவது எப்போது?

இதைத் தீர்க்க என்னாலான யோசனை:

மங்களம்-கள் கவலைப்படுவதோடு நிற்காமல், தான் இருக்கும் பகுதியில் முன்னுதாரணமான விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு ராஜாராமன்களோடு சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை நேர்மை, நேர நிர்வாகம், தேசபக்தி போன்ற குணநலன்களை கற்பிக்கும் இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடத்த வேண்டும் (அ) நடத்த வருபவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.

ஆக கவலைப்பட வேண்டியது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பற்றியல்ல, நம் மக்களின் பொது ஒழுக்கம் எனும் பண்பு குறித்தே!

-கா.முத்துகிருஷ்ணன்


muthush@yahoo.com

Series Navigation

கா.முத்துகிருஷ்ணன்

கா.முத்துகிருஷ்ணன்