மகாராஜாவின் இசை

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

ஜெயமோகன்

திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல்மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப் ாிகார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள். அவளுக்கு தஞ்சைப் பகுதி காற்று வாக்கினால் கர்நாடக சங்கீத ஆர்வம் உண்டு. இந்தியா டுடே உத்வி ஆசிாியர் நண்பர் அரவிந்தன் [இப்போது உலகத்தமிழ் இணையதளம் ]வந்து இசையைப்பற்றிபேசிப்பேசி அவள் ஆர்வத்தினை தூண்டிவிட்டு போனார் .எனக்கு அந்த ஓசையே ஆகாது . தனி அறையில் பாட்டு கேட்பேன் , ஒலியை முடிந்தவரை குறைத்து வைப்பேன் என அருண்மொழி சொன்னாள் .

பாட்டெல்லாம் வாங்கியது அரவிந்தனின் சிபாாிசின்படி . நான் அவ்வொலியை கூடுமான வரை செவிப்பக்கமாக வர விடாமல் பார்த்துக் கொண்டேன் . மூன்றாம் நாள் இரவில் விஷ்ணுபுரம் நாவலில் அனிருத்தனின் மரணம் நடந்த அத்தியாயம் எழுதி ஆழமான மனச்சோர்வுக்கு ஆளாகி ,கிட்டத்தட்ட பிணம் போல விழுந்து கிடந்தேன். அப்போது கன கம்பீரமான ஒரு குரல் கேட்டது .ஒரு கணத்தில் அது என்னை முழுக்க ஆட்கொண்டது என்று சொன்னால் புனைவுப்பேச்சு என தோன்றும் ,ஆனால் அது உண்மை .மகாராஜபுரம் சந்தானம் பாடுவதற்கு முன்பு இலேசாக முனகுவார் ,அவ்வொலியிலேயே அவர் என்னுடைய பாடகராக ஆனார் . அது இசை மலையில் கசியும் சிறு ஊற்றுபோல , முதல் மழைத்துளிபோல .

அது ஸ்ரீ மகா கணபதிம் என்ற பிரபல இசைப்பாடல் . அசையும் கரும்பாறைபோல யானை மெல்ல உடல் நலுங்காது நடக்கிறது . கண்ணுக்கு தொியாத காற்றில் மரக்கூட்டங்கள் ஒரே திசை நோக்கி சாய்கின்றன. பிரம்மாண்டமான பழைய கட்டிடம் ஒன்றில் பட்டுத்திரைச்சீலை நெளிகிறது . யானை முன்னே செல்லாமல் நின்ற இடத்திலேயே நடப்பதுபோல பாவனை செய்கிறது .தனிமை மிகுந்த மலையுச்சிமீது ஒரு கருமேகம் கரைந்து கரைந்து உடல்பெறும் யானை. நீர்ப்பரப்பில் காற்று அலைவடிவாக பரவி கரைகளை மெல்ல மோதிப் பின்வாங்குகிறது .நெற்றிப்பட்டம் போல மெல்லத்திரும்பும் பூத்த கொன்றை குன்றுகள் குளிர்ந்து நிலைத்து நின்றன.யானை எத்தனை மகத்தான ஒரு வடிவம்!

பாட்டுமுடிந்த போது இடைவெளி மெளனத்தில் நான் ‘அருண்மொழி இது யாரு ? ‘ என்றேன் . ‘ மகாராஜபுரம் சந்தானம் . அரவிந்தன் குடுத்தார் ‘ . ஆரம்பகால இசை ரசிகர்கள் தங்கு தடையின்றி உள்ளே செல்ல ஏற்ற பாடகர் சந்தானம்தான் என்றார் அரவிந்தன் பிறகு . ‘அவர் பாவத்துடன் பாடுவார் . ரொம்ப ராகவிஸ்தாரமெல்லாம் பண்ண மாட்டார்.ஆனா ராகத்தொட அழகை எப்படியோ காட்ட்டுவார் ‘ என்றார் .

அந்த இரவு நான் தூங்கவில்லை . ஆபோியில் இறந்து போன என் அன்னை தன் குலதெய்வ முகத்துடன் எழுந்துவருவதைக் கண்டேன் .சிந்துபைரவியில் ந்டனமிடும் நாணல் கூட்டங்கள் . தேவகாந்தாரத்தில் இழந்துபோன ஒளிமிக்க பள்ளிநாட்களின் முகங்கள் . நீலாம்பாியில் மென்மையான ஒரு முத்தம் .மீண்டும் மீண்டும் சந்தானத்தின் நான்கு கேசட்டுகளை கேட்டபடியே இருந்தேன்.விடிந்ததும் சேலம் சென்று மேலும் கேசட்டுகள் . மீண்டும் தூக்கமில்லாத இரவுகள்.

இசைமீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது .விஷ்ணுபுரம் உருவாக்கிய மனநிலைக்கு மிக அருகே இருந்தது இசை . காம்போதியின் ஒலியில் ராஜகோபுரம் புறாக்கள் சிறகடிக்க விழித்தெழும் . தூசு அலையும் விஷ்ணுபுரத்தெருக்களில் ஆலாபனைச் சுழற்சியுடன் சேர்ந்து சுற்றி சுற்றி வருவேன் . ஆனந்த பைரவி என் கொந்தளிப்புகளை அடக்கி தன் மடியில் என்னை அணைத்துக் கொள்ள தூங்குவேன் .

ஒரு கட்டத்தில் இசையில் வெகுதூரம் செல்லக்கூடாது என்று என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன் .நான் அடிப்படையில் ஒரு நாவலாசிாியன். அலுவலக வேலையும் குடும்பமும் தரும் இடைவேளைகளில் எழுதும் எனக்கு இசை கேட்க நேரம் இல்லை . ராகங்களை அடையாளம் காணக்கூடாது என என் மீது கண்டிப்பு கொண்டேன். மறுபக்கம் என்னை இசைக்குள் இழுத்துப்போடும் நண்பர்கள் . அரவிந்தன், எம் யுவன் , அச்சுதன் அடுக்கா[தி சீனிவாசன் ] . முக்கியமாக சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும். .

ஜேசுதாசின் குரல் எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை.அது பாசாங்கானது என்பது என் கணிப்பு. பாலமுரளிகிருஷ்ணாவின் குரல் பிடிக்கும் .ஆனால் பாவங்களில் மிகை உண்டு என்பது என் மனப்பிரமை . செளம்யா ,நிதயஸ்ரீ , பாம்பே ஜெயஸ்ரீ , சஞ்சய் என எல்லாரையும் கேட்பேன் .ஆனால் மகாராஜா தவிர எவருமே என் ஆழங்களை ஊடுருவவில்லை . அரவிந்தன் சொன்னார் , சந்தானம் அந்த அளவுக்கு பொிய பாடகர் இல்லை என. எம் டி ராமநாதனையும் மணிஅய்யரையும் ஜி .என். பியையும் அறிமுகம் செய்தார் . ஆனால் சுந்தர ராமசாமி சந்தானத்தை தி ஜானகிராமனுடன் ஒப்பிட்டார் .முதல்கட்ட வாசகனை கவரும் எளிமையான கலைஞன் .ஆனால் நாம் கலையின் அதிநுட்பங்களை அறிந்தபின்பும் அவாிடம் புதிதாக ஏதோ இருந்துகொண்டுதான் இருக்கும் .

ஆற்றூர் ரவிவர்மா வருடம் தவறாமல் டிசம்பர் கச்சோி ,அதன் பிறகு திருவையாறு ,பிறகு பூனா ஹிந்துஸ்தானி இசைவிழா ,அதன் பின் பரோடா என போகும் அதிதீவிர இசை ரசிகர் .அவருடன் நானும் கச்சோிகளுக்கு போனேன். ஒரே ஒரு முறைதான் மகாராஜாவின் கச்சோிக்குபோக முடிந்தது . ம்யூசிக் அகாதமியில் இரவில் . இசைக்கச்சோிக்கு அப்படி கூட்டம் அப்புவதை என்னாலேயே நம்ப முடியவில்லை. கனத்த உடலை குவித்து மகாராஜா அமர்ந்திருக்கும் விதம் , அவரது தடித்த கண்ணாடிக்குள் தேங்கிய சிாிப்பு , அவரது சாிகை அங்கவஸ்திரம் என மோகத்துடன் பார்த்தவாறே இருந்தேன். கச்சோி தொடங்கும்போது அவர் தன் கனத்த குரலில் அந்த மெல்லிய முனகலை எழுப்பியபோது அவரது பாதங்களை நோக்கி ஓடிப்பணிந்தது என் மனம் .

அதன் பிறகு ஒரு மதியக் கச்சோியின் இடைவேளையில் சந்தானம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் .அவரது முதுகுக்கும் எனக்கும் இடையே அரை அடிதூரம் என்பது என்னை பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது . தனக்குத்தானே பாடியபடியே இருந்தார் .மிக ருசித்து ஒரு பொங்கல் சாப்பிட்டு , இன்னொரு பொங்கலுக்கு சொன்னார். அவாிடம் அறிமுகம் செய்துகொள்ளும் தன்னம்பிக்கை எனக்கு வரவேயில்லை . அன்று என் ரப்பர் ,திசைகளின் நடுவே இரண்டும் வந்து விட்டன. எழுத்தாளன் என்ற தன்னுணர்வும் ,எதிர்காலத்தில் நான் எழுதப்போகின்ற படைப்புகள் பற்றிய ஆழமான சுயமதிப்பும் எனக்குள் உருவாகிவிட்டன . இன்றுவரை எங்கும் எவர் முன்பும் நான் சாதாரணமானவனாக என்னை உணர்ந்ததில்லை . ஆனால் மகாராஜா முன் தோன்றக் கூசினேன்.

ஒரு தம்பதி வந்து அவாிடம் பேச ஆரம்பித்தது . அவர் காபி சாப்பிட்டார் .குசலம் விசாாித்தார் .ஆனால் அவர் வாயில் இருந்து பாட்டு வந்தபடியே தான் இருந்தது . ‘ ஹிமகிாி தனயே ஹேமலதே – பாத்தேளா ? நான் முந்தாநேத்துத்தான் பாத்தேன் .நாராயணய்யர் வீட்டிலே – அம்ப ஈஸ்வாி ஸ்ரீ.. ‘ என்று

மகாராஜாவின் பாட்டுக்கு என்ன சிறப்பு ? மிக இயல்பாக , சற்றும் மிகை இல்லாமல் அவரது குரலில் பாவங்கள் இசையுடன் கலந்து குடியேறுகின்றன. இப்படி விளக்கலாம் . எம் .டி .ராமநாதனின் தொண்டை மகத்தான ஓர் இசைக்கருவி .அது அவரை வான் வெளிக்கு எடுத்துச் செல்லும் , அழுத்தம் உச்சம் கொண்ட ஆழத்திலும் நகரச் செய்யும் . ஆனால் அதில் பாவங்களே இல்லை .அவர் பாடும் ராகத்தின் உள்ளுறையான உணர்ச்சி மட்டுமே அவர் பாடலில் கூடுகிறது .[மணி அய்யர் பாவங்களுக்கே எதிரானவர். பாடல்களை அவர் உடைப்ப்பதை பார்க்கும்போது தமிழ்க் கீர்த்தனைகளை அவர் குறைவாகப் பாடியது ஆழ்ந்த தமிழ்ப் பற்றினாலேயே என்று தோன்றுகிறது .] ஜேசுதாஸ் திரைப்படப்பாடல்களுக்குாிய பொய்யான மிகையுணர்ச்சிகளை பழக்க தோஷத்தால் மரபிசையிலும் கலந்து விடுகிறார் . மகாராஜா இரு எல்லைகளுக்கும் நடுவே மிக கச்சிதமான ஒரு கோட்டில் நகர்கிறார் .

ல் நான் இரவுப்பணி முடிந்து கிளம்ப யத்தனிக்கும்போது என்னை விடுவிக்க வந்த ரமேஷ் ‘ ஏம்பா உங்காளு , சந்தானம் போய்ட்டார் போலிருக்கே ?ஆக்ஸிடண்டாம் இப்பதான் ரேடியோல சொன்னான் ‘ ‘ என்றார் . எனக்கு அது ஒரு சம்பந்தமில்லாத செய்தியாகவே பட்டது . அவரை நான் அறிந்து நெருங்கிய எல்லா வழிகளும் அப்படியேதான் இருக்கின்றன என்று எண்ணினேன் . வீட்டுக்கு போகும் போது ஒரு விதமான ஏக்கம் மட்டுமே மனதில் இருந்தது . அருண்மொழியிடம் சொன்னபோது அவள் கண்ணீர் விட்டாள். நான் அன்று முழுக்க அவர் பாட்டுகளாக கேட்டென். இரவில் தனிமையில் பெருமூச்சுகளாக விட்டுக் கொண்டிருந்தேன்.

இன்று எனக்கு தொியும் சந்தானம் பெரும் இசைவிற்பன்னர் அல்ல என்று . நமது இசையில் சகஜமாகவே மேதைகள் என்று சொல்லத்தக்க பலர் உண்டு என்று . ஆனாலும் சந்தானம் எனக்கு மகாராஜாவாகவே பட்டார். விஷ்ணுபுரத்துக்குப் பிறகு எனக்கு இசை அதிகம் தேவைப்படவில்லை . எங்கள் டேப் ாிக்கார்டர் பழுதாகியது, வேறு ஒன்று வாங்க பணம் ஒதுக்க முடியவும் இல்லை .அருண்மொழி ரேடியோவை வைத்தே சமாளித்தாள். பின் தொடரும் நிழலின் குரல் மூலம் நான் வெகுதூரம் தள்ளி வந்து விட்டேன் . சந்தானத்தின் பாடலைகேட்டே வெகு நாட்கள் தாண்டி விட்டன.

இவ்வருடம் என் பிறந்தநாளுக்கு ஒரு வாசக நண்பர் ஒரு டேப் ாிகார்டர் பாிசளித்தார் . புதிதாக கேசட்டுகள் வாங்க நானும் எம் .எஸ் சாரும் கடைக்கு போயிருந்தோம் . அருண்மொழிக்குப் பிடித்தமான நித்யஸ்ரீ ஜெயஸ்ரீ சுதாரகுநாதன் என அடுக்கியபோது சந்தானம் கண்ணில் பட்டார் . இரவில் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு சந்தானத்தின் குரலைகேட்டேன் .அந்த முதல் மீட்டலிலேயே அவருக்கும் எனக்கும் இடையேயான அந்த அந்தரங்க இடம் உருவாகிவிட்டது . ‘ மோகத்தை கொன்றுவிடு .அல்லாலென் மூச்சை நிறுத்திவிடு ! ‘ [http://www.musicindiaonline.com/music/l/00001H00 ]என மகாராஜாவின் குரல் உருகும்போது பாரதியின் கனல்முகம் கண்முன் தொிந்தது .

எனக்குத் தொியும் இம்மனநிலை பற்றி பிறர் என்ன சொல்வார்கள் என . இதை ரசிக மனநிலை என நானே சிலசமயம் விமாிசிக்கக் கூடும் . ஆனால் தன்னகங்காரம் , சுய அடையாளம், அறிவின் பெரும்பாரம் ஆகிய அனைத்தையும் கழற்றி வைத்து எளிய ரசிகனாக சரணடைவதில் , கலையின் வாசல்முன் முழுஉடலும் பணிய விழுவதில் ,மகத்தான ஒரு சுதந்திரம் உள்ளது . எத்தனை மேதைகள் இருந்தாலும் மகாராஜாவைத்தவிர எவரையுமே நான் பெரும்பாடகனாக அங்கீகாிக்க மாட்டேன் .அவரது குரலின் சாயல் இல்லாத [கண்டசாலா மகாராஜாவின் தம்பி ] எவரையும் ரசிக்கவும் மாட்டேன். இப்பிறப்பில் நான் அவருக்கு மட்டுமே ரசிகன் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் .

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation