போன்சாய் குழந்தைகள்
Published December 25, 2003 • By
ரமா
ரமா

அடுக்குமாடி வீடுகளில்
கனவுத் தாவரங்களாய்
போன்சாய்கள்
கால்களைச் சுற்றிச் சுற்றி வரும்
பொமரேனியன்கள்
வளைய வரும் நண்பர்களாகத்
தொட்டிகளில் வண்ணமீன்கள்
வழி தப்பி வந்த
வண்ணத்துப் பூச்சி
ஓய்வாய் அமரும்
ஆர்க்கிட் பூக்கள்
வீட்டுப் பாடச் சுமையில்
விளக்கடியில் உறங்கும்
குழந்தை
அடுக்குமாடி வீடுகளில்
கனவுத் தாவரங்களாய்
போன்சாய்கள்
-ரமா
***