பொதுவுடமை.

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

சேவியர்.


0

எப்போதும் காணக் கிடைக்கிறது
கழிப்பறைகளில்
கிறுக்கல்கள்,

நிர்வாண மனதின்
அடையாளங்களற்ற
வார்த்தைக் குறியீடுகள்.

முகமூடிகளை முகங்களே
திருடிக் கொண்டு,
உண்மைகளை
ஒப்புவிக்குமிடங்களாய்
பக்கச் சுவர்கள்.

நகர்ப்புறத்துக்
கட்டணக் கழிப்பிடங்களில்
மட்டுமல்ல,
அமெரிக்காவின்
குளிர்க் கழிப்பிடங்களிலும்
மிதக்கின்றன
மோகம் விற்கும் முகவரிகள்.

0

சேவியர்.
Xavier_Dasaian@efunds.com

Series Navigation