பூவும் நாரும்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

புதியமாதவி


ஓடும் வண்டியில்
உரசியது வெட்பம்
சூடிய பூக்களில்
சூடு பரவியது

கைகள்
தாள்களைப்
புரட்டிய போது
பதவியின் கண்கள்
தாவணியைப் புரட்டியது..!

குளிர் அறையின்
வெட்பம் தாங்காமல்
வெள்ளை நிறப்பூக்கள்
வெதும்பிக் கருத்தது

சூரியன் குளிர்காயும்
சந்திரப் படுக்கையில்
பதவிக்கும் பணத்துக்கும்
பாஞ்சாலி பகடைக்காய்

வாடியது – அந்தப் பூக்கள்
வாழ்கிறது – பூவின் நார்கள்.
***
புதியமாதவி
மும்பைய் – இந்தியா

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை