புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

கோட்டை பிரபு


நாட்டின் வளர்ச்சியில் நல் அமைப்புகளின் சேவை
�கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையில் பீடுஉடையது இல்�. [குறள்]
எனும் குறளுக்கிணங்க செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் அமைந்துள்ள நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஊரின் வளர்ச்சிக்கும், தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் ,சீரிய பணியாற்றி வருகிறது இவ்வியக்கம். அரசியல் சார்பற்ற, மக்கள் நலனை மட்டுமே மனதில் நிறுத்தி தனது கட்டுக்கோப்பான உறுப்பினர்களின் மகத்தான சேவையில் இன்றும் மிளிர்ந்து நிற்கிறது.
நல் இனிய இயக்கம், ஊரின் அடிப்படைத் தேவைகளுக்காக பணி சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தல், கோவில் திருவிழாக்களில் அனைத்துவித பணியினை ஏற்று சிறப்புற முடித்தல் மற்றும் ஊரார் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களின் சுமை குறையும்வண்ணம் அனைவரும் இணைந்து செயலாற்றுதல், அன்னதான நிகழ்ச்சிகள், விழாக்காலங்களில் சிறுவர் ,பெரியவர் என அனைத்து தரப்பினரும் கலந்து இன்புறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் போன்ற அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் எண்ணிலடங்கா…,
இவ்வியக்கம் ஆரம்பித்த காலந்தொட்டே இதன் தலைவராக விளங்கிவரும் M.பிரகாசம் அவர்களும், இயக்கத்தின் ஆற்றல் மிகு செயலாளர் முருகேசன் அவர்களும், இறைப் பணியில் தம்மை இடையறாது ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சினிவாசன் அவர்களும் மற்றும் இதன் ஒவ்வொரு உறுப்பினரின் தன்னலமற்ற சேவையினால் இப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர் என்று சொன்னால் அது மிகையல்ல,.
இவ்வியக்கத்தின் மக்கள் சேவையினைப் பாராட்டி ஆலங்குடி ரோட்டரி கிளப் பலமுறை
நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பு செய்துள்ளது.
�நாட்டின் வளர்ச்சிக்கு நல் அரசுகள் தேவை
ஊரின் வளர்ச்சிக்கு நல் அமைப்புகள் தேவை�
என்பதை உணர்ந்து செயலாற்றிவரும் நல் இனிய இயக்கத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வது..,
என்றும் அன்புடன்,
கோட்டை பிரபு


Series Navigation

கோட்டை பிரபு

கோட்டை பிரபு