கலாப்ரியா
எங்கே நான் இறங்க வேண்டுமோ
ரயில் அங்கே நின்றது
ஏற்கெனவே ஏற்பட்ட
தீர்மான நிறுத்தல்கள்.
-நகுலன்.
பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம் மிக விசாலமான அடர்த்தியான சார்-பிராந்தியம்(co-domain).
அந்தச்சார்பு (mapping) புறப்படும் பிராந்தியம் (domain) அதுவும் அடர்த்தியானது. சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லா
வற்றையும் உள்ளடக்கியது -பால் வெளி மண்டலம் தாண்டி- க்வாசரின் பிராந்தியம் வரை விரியும். வரிகள், லிபிக்கிடையே க்வார்க்கை காண்பிக்கும்.நீங்கள் எதையும் விட்டு விட முடியாது. அதன் அனுபவத்தை கட்டுரையாக்கி விட முடியாதுஎன்பதை இந்தச் சந்தர்ப்பம் மீண்டும் உறுதிப்படுத்தியது.நாம் தப்பித்து விட நினைக்கிற(அல்லது உபதேசிக்கப்படுகிற)நேற்று எனும் இறந்து கொண்டிருக்கும் நொடியையும் பெரும்பாலும் பயப்படுகிற, நெகிழ்வாக்குகிற, அறிவால் உணர்ந்துவிட யத்தனிக்கிற எதிர் காலத்தையும் எந்த யத்தனமுமின்றி (just like that ?) so random ஆகத் தேர்ந்து நிகழ் காலத்தில் பேனாமுனை தாளைச் சந்திக்கிற கணத்தில் உருவாகும் வார்த்தைக்கூட்டம் அது.என் இந்த வரிகள் சற்று மிகையாகப்படலாம். சாத்தியமாயிருக்கிறது பிரம்மராஜன் கவிதையில்.
நகுலன் வார்த்தைகளில் சொன்னால் , ‘A pre-arrangement of signicant pauses ‘. நினைவுகள் கரைந்து
பூமி கீறுகிறது விதையிலையாய், கனிந்தும் விடுகிறது சட்டென்று ராட்சச சிசு போல், அவர் கவிதைகளில் அனுபவம்.ஒரு சோதனை எனச் செய்யலாம் என்ற ஒரு கணத்தில் தோன்றிய யோசனையில் அவரைப்போல எழுத முயன்று(முயலாமல் முயன்று என்பது இன்னும் சரியானது)எழுதிய இந்தக்கவிதைகள் தானாகவே என் கவிதையாக transform ஆகிற விந்தையை அனுபவிக்க முடிந்தது.ஒரு வகையில் இது என் தோல்வி. பிரம்மராஜனின் வெற்றி.பிரம்மராஜனால் பிரம்மராஜனுக்காக என் இந்தக்கவிதைகள்.
-கலாப்ரியா
மகா வாக்கியம்
1) இருப்பதில் கனமான
நினைவுத்திரியினை
நினைவின் சார்புகளை
யொதுக்கித் தேர்ந்து
(தேர்வு நேற்றின் சார்புடைத்து
எனத் தெளிந்தொதுக்கி)
சர்வ கவனத்துடன்
மறக்க
எதிர் காற்றின்
மகரந்த நரகல் வாசனைகளைச்
சுவாசியாமல் நாசி பொத்தி
என் பாரசூட்
விரியக் காத்திருப்பதை
உணராமல் தவிர்த்து
அந்தரத்தில் நான்
மேகப்பொதி
தலைக்கு மேல்த்தான்
வயல்வெளி காலடியில்
கவிதைப்பொறி
ஊதிப்பெருந்தீயாக
காற்று இல்லை சுற்றிலும்
எழுது கோலும்
உன் பையில்
கணினியின்
வெற்றுதிரை முன்னால்
கைகளை விசைப்பலகைக்கு
கொண்டுபோய்க்கொண்டு
அவன்.
2) வலி நிகழ் காலம்
இடித்தது இறந்த காலம்
கரையெங்கும் நுரை
யெழுதி வடியும் மகாவாக்கியத்தில்
நான் கால் நனைத்து
தக்க நிறுத்தற்குறிகளெனக் கடலில்
படகுகள் தோணிகள் வல்லம் லாஞ்சி
நாவாய் கட்டுமரம் துரப்பணக்கப்பல்
செங்கோண் தரைச்செலவு
கடலுக்கடியில் கபாடபுரத்தில் ?
3) வழு வழுப்பானசிரட்டை
வாக்கியங்கள் மண்புழுப்போல்
சிதைந்துமிக சிதைந்து
வாகாகப் பெருவிரல் நகம்
துண்டித்து சமச்சீராய்ச் செருகி
வீசினான் . நிறுத்தற் புள்ளியெனச்
சில நேரமே மிதந்தது தூண்டில்மிதவை
கூடையிற் போடும்முன் நானும் வாசித்தேன்
‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ‘
4) குவார்க்கிலிருந்து
க்வாசர் வரை-நீ
வெளி நீந்தவிட்டவை
ஆகாயத்தோட்டியென்றழைக்கும்
காகங்கள் கவ்விச்சென்றன
தங்கள் நிறம் இருள்வாங்கிக்கொள்ள
பசிமறைய கூடடைந்தன
ஒரு கிரஹணத்த்ில் சீக்கிரம்
இருட்டத்தொடங்கியது ப்ரமை கொண்ட பகல்
அவசரப் பறவைகள் இலைகளின் மறைவில்
கூவத்தொடங்கின.என் குஞ்சுகள்
பசியாற உணவு போதாதென்றபோதும்.
எனினும் வீட்டினுள் அறையிலிருந்தேன்
ஸ்படிக நீர் நிறைந்தென்
மனம் இப்போது
சற்றும் காற்றெழுதாத
அலைவரிகளற்று.
5) நாளென் வசமிருந்தது நீ
நேரத்தையெடுத்துக் கொள்ளாததும்
நல்லூழே
கணத்தை நிர்ணயிப்பது
சற்றே கடினமாயிருந்தது
(அல்லது தானே யோனி திறந்து தயாராயிருந்த
அந்நொடிக்குள் பொருந்துவது
கடினமாயிருந்தது சற்றே)
வெளியேற்றுவது என் வசமின்றிப்போன
நொடியில் பாய்ந்தது சுக்கிலம்.
நீந்திக்கொண்டிருந்த அம்மீன்கள்
தத்தம் குரொமசோம்களை விழுங்கி
பவளப் பாறைகளுக்கிடையே
பதுங்கின. வெளிச்சம் எங்கும் பரவ
ஆணை கேட்டது ஆதியாகமத்தின்
ஆரம்ப வாக்கியங்களாய்.
6) ரெனே மகரித்
பற்றி எனக்குத்தெரியாது
என் புலன் நுகரும் ஏதோஒரு மறைவில்
சற்றேபெரிய இரையைத் தட்டித் தட்டி
விழுங்கும் பல்லிக்கும்.
பெட்டிச்செய்தியும்
புகைப்படம் அருகேயும்
பிரசுரமாகியிருந்தன
செத்துப்போன இன்னொரு கடலின்
திமிங்கலங்கள் ஒதுங்கியிருந்ததை.
பகலில் உந்தியும் குறும்பைமுலையும்
தெரியத்தூங்கும் பெண்ணை
நாகரிகம் கருதி
விட்டொதுங்கிற்றென் தனிமை.
***
tksomasundaram@yahoo.com
- அன்புள்ள தோழிக்கு….
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி…
- விதியோ ?
- அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்)
- திலகபாமாவின் புத்தக வெளியீடு
- பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்
- புதுவருடத்தில் வேண்டும் என்று 10 பாகிஸ்தானிய ஆசைகள்
- ஏனோ ….
- சுய ரூபம்
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மன்ட் ஹாலி [Edmond Halley](1656-1742)
- நிழல் யுத்தம்
- தேர்தல்
- நானொரு பாரதி தாசன்!
- எரிமலைப் பொங்கல்
- பூவின் முகவரி
- அமைதி
- ஞானம்
- விக்ரமாதித்யன் கவிதைகள்
- வெட்கமில்லா ஊரில் வெட்கமில்லை!
- நேர்ந்தது
- கடிதங்கள்
- உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- தேவை ஒரு சுத்தமான பாத்ரூம்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா)
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- அனுமன் வேதம்
- ‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்!
- சிறு கவிதைகள்
- இறைவன் அருள் வேண்டும்
- வரம் வேண்டி
- ஸ்ரீஆஞ்சனேயன்..
- மீண்டு(ம்) வருமா வசந்தம்… ?
- நீ வருவாய் என..
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- அறிவியல் துளிகள்